பக்கம்:ராஜாம்பாள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரீ புருஷ சம்பாஷணை 17

கனகவல்லி, பரீட்சையில் தேருததால் கொடுக்க மாட்டேனென்று நீங்கள் சொல்வது சரியன்று. இவ்வளவு கெளரவம் பொருந்தியிருந்த ராஜா சர் இராமசாமி முதலியார் அவர்கள் என்ன பரீட்சையில் தேறியிருந்தார் கள்? அதிருஷ்டம் வந்தால், தானே கொடுக்கிறது. -

சாமிநாத சாஸ்திரி: உன் தம்பி நடேசன் படிக்காமல் மாத்திரம் இருந்தாலும் போனல் போகிறதென்று கொடுக் கலாம். அவன் சென்னையில் தேவடியாள்களை வைத்துக் கொண்டு வீண் செலவுகள் செய்வதாகவும், ஸ்பென்சர் கம்பெனி யில் ஏராளமாய்ச் சீமைச் சாராயங்களை வாங் கிக் குடிப்பதாகவும், கண்ட கண்ட இடத்தில் தாராள மாய் ச் சாப்பிடுகிறதாகவும் என் வக்கீல் எழுதியிருக்கிரு.ர். கனகவல்லி: இந்தப் பாழுங் கோபாலன் அவருக்கு ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் கொடுத்து எழுதும்படி சொல்வியிருந்தாலும் சொல்லியிருப்பான்.

சாமிநாத சாஸ்திரி: பார்த்ததுபோல் திடீரென்று ஏன் அபாண்டங்கள் சுமத்துகிறாய்? உன் தம்பி இப்படிப் பட்ட கெட்ட காரியங்கள் செய்யாவிடில் நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்க வேண்டிய காரணம் என்ன? இதையெல்லாம் யோசியாமல் வக்கீலின்பேரிலும் கோபாலன் பேரிலும் பழி சுமத்துகிறாய். - -

கனகவல்லி: சிறு பிள்ளையாயிருக்கும்போது யாருந் தவறுவது சகஜமே. கல்யாணஞ் செய்து வைத்துவிட்டால் துர்க்குணங்களெல்லாம் மாறி நல்லவனுகிவிட மாட் டானே? லோகத்திலே தாசிகள் வீட்டுக்குப் போகிறவர். களும் குடியர்களும் இல்லாமலா இருக்கிரு.ர்கள்? அப் பால் அவர்கள் நல்ல வழியில் திரும்புவதில்லையோ? போகட்டும். கோபாலன் ஒன்றும் அறியாதவனென்றும் ரொம்ப நல்லவனென்றும் சொல்லுகிறீர்களே. இப் போது நல்லவனென்றே வைத்துக்கொள்வோம். நல்ல வர்களாயிருக்கிறவர்கள் கல்யாணஞ் செய்த பிற்பாடு கெட்டவர்கள் ஆகிறதில்லையோ? . . .

சாமிநாத சாஸ்திரி. உன் தம்பி நல்லவனுகவே இருக் கட்டும்; நான் ஒருபோதும் உன் தம்பிக்கு ராஜத்தைக் கொடுக்க ஒப்புக்கொள்ளமாட்டேன். இது நிச்சயம்.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/21&oldid=677387" இலிருந்து மீள்விக்கப்பட்டது