பக்கம்:ராஜாம்பாள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இராஜாம்பாள்

சமையல் செய்தாள். சாயங்காலம் ஆறு மணியானதும் இரட்டைக் குதிரை கட்டிய தன் வண்டியை ரெயிலுக்கு அனுப்பி வக்கீல் ஐயங்காரை அழைத்துக்கொண்டு வரும் படி தன் கணவனேயும் அனுப்பினுள். சாமிநாத சாஸ்திரி ரெயிலுக்குப் போய் ஐயங்காரவர்களே அழைத்துக் கொண்டு வரும் வழியில், நடந்த சங்கதிகளை யெல்லாம் சாங்கோபாங்கமாய்ச் சொன்னர். ஐயங்கா ரவர்கள் நடேசனுக்குப் பாதிச் சொத்தைக் கொடுப்பதை விட ஏதாவது தர்மம் செய்வது யுக்தமாயிருக்குமென்றும், நடேசனுக்குப் பாதிச் சொத்தைக் கொடுப்பதால் அவனுக் குக் கெடுதல் இன்னும் அதிகம் உண்டாகுமே தவிர நன்மை உண்டாகாதென்றும் அவரால் ஆன வரையிலும் சொல்லியும் சாஸ்திரிகள் கேளாததால், சிறிது வருத்தத் துடன் உயில் எழுத ஒப்புக்கொண்டார்.

உயில் எழுதச்சொன்ன பிரகாரம் வக்கில் எழுத வேண்டியதுதானே? கொடுக்கக்கூடாது என்று சொல் தற்கு இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று 1தை வாசிப்போர் நினைக்கலாம். சாமிநாத சாஸ்திரியும் பக்கீல் துரைசாமி ஐயங்காரவர்களும் சிறுபிள்ளைகள் முத லே ஒன்றாய்ப் படித்தது மாத்திரமன்றி இருவரும் ஆப்த மித்திரர்கள். இந்தப் பாழும் பிசாசாகிய கனகவல்லியின் பேச்சைக் கேட்டு ரத்னபூஷணமாகிய இராஜாம்பாளைக் கொடிய துஷ்டனுகிய நடேசனுக்குக் கல்யாணஞ் செய்து கொடுக்காமல் இருந்ததே, வக்கீல் ஐயங்காரவர்களுக்கு அத்யந்த சந்தோஷம்: பாதிச் சொத்துத் தொலைவது பிரமாதமில்லை என்றும் இதுகூடச் செய்யாவிட்டால் கனகவல்லி முன்னும் பின்னும் போகவிடமாட்டாளென் றும் தமக்குத் தாமே சமாதானம் செய்துகொண்டார். சாப்பாடு முடிந்தவுடன் பின்வருமாறு உயில் எழுதப் பட்டது.

உயில்

செங்கற்பட்டுஜில்லா காஞ்சீபுரந்தாலுரக்கா,

காஞ்சீபுரம் வடக்கு ராஜ வீதியில் 48-வது நெம் பர் வீட்டில் இருக்கும் ராமசாமி சாஸ்திரிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/24&oldid=677390" இலிருந்து மீள்விக்கப்பட்டது