பக்கம்:ராஜாம்பாள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாஸ்திரியின் உயில்

குமாரர் சாமிநாத சாஸ்திரி எழுதிவைக்கும் உயில் ஒன்னவென்றால்:

யாதொரு வில்லங்கத்திற்கும் உட்படுத்தா மல் என் அதீனத்திற்குள்ளிருக்கும் சுமார் அறு பது லட்ச ரூபாய் பெறுமான வைரம் விளைந்த வாதம் பட்டி என்னும் கிராமத்தையும், அதற்கு அருகிலுள்ள மாவிந்தபுரம் என்னும் கிராமத் தையும், என் புத்திரியாகிய இராஜாம்பாளுக்குக் கிடைக்கும்படிக்கும், சுமார் அறுபது லட்ச ரூபாய் பெறுமான தங்கம் விளைந்த தர்மாபுரம் என்னும் கிராமத்தையும், அதற்கருகிலுள்ள மாவிந்தபுரம் என்னும் கிராமத்தையும், என் பெண்சாதியின் கூடப்பிறந்த நடேசனுக்குக் கிடைக்கும் படிக்கும், நகைகள், பொன், வெள் வளிப்பாத்திரங்களை எல்லாம் மேற்சொன்ன இராஜாம்பாளுக்கும் நடேசனுக்கும் சம்பாக மாய்க் கொடுக்கும்படிக்கும், இரும்புப்பெட்டி யில் ரொக்கம் வைத்திருக்கும் பதியிைரம் ரூபா யையும் இராஜாம்பாள் கல்யாணச் செலவுக்கு ரூபாய் ஐயாயிரமும் நடேசன் கல்யாணச் செல வுக்கு ரூபாய் ஐயாயிரமும் கொடுக்கும்படிக்கும், சென்னை, ஆர்பத்நட் அவுசில் டிபாசிட் கட்டி யிருக்கும் பணத்திலிருந்து மாதம் மாதம் வரும் வட்டி ரூபாய் ஐந்நூறையும் என் பெண் சாதி கனகவல்லி சம்ரட்சணைக்காகக் கொடுக்கும்படிக் கும், எனது ஆப்த நேயரான வக்கீல் துரைசாமி ஐயங்காருக்கு ஆர் பத்நட் அவுசில் எனது கரன்ட் அக்கெளன்டில் இருக்கும் இருபதினுயிரம் ரூபா யையும் கொடுக்கும்படிக்கும் தீர்மானித்து, ம-ா-ா-யூரீ வக்கீல் துரைசாமி ஐயங்காரையும், காஞ்சீபுரம் கஸ்பா தாசில்தார் விசுவநாத சாஸ் திரிகளையும் அட்மினிஸ்டிரேட்டர்களாய் ஏற் படுத்தி, மேலே சொன்ன என் அபிப்பிராயத்தின் படி நடத்திவைக்க அவர்கள் இருவரையும் கேட் டுக்கொள்ளுகிறேன். தெய்வாதீனமாய் மேற் சொன்ன இராஜாம்பாளாவது மேற்சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/25&oldid=677391" இலிருந்து மீள்விக்கப்பட்டது