பக்கம்:ராஜாம்பாள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோஸ்யத் தரகர்கள் 23

ராஜத்தை மனப்பதற்குத் தகுதியானவர் வேறே கிடை யாது. எப்படியாவது இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாய் ஜாதகம் பார்க்க வரும் ஜோஸ்யர்களுக்குக் கொடுத்தேளுகில் நான் சொல்லுகிறபடி அவர்கள் ஆடப் போகிறார்கள்; பின்னல் பார்த்துக்கொள்ளுகிறேன். அப் பால் இக்கிழட்டுப் பிணம் வலிய நடேசனைக் கல்யாணஞ் செய்துகொள்ளும்படி சொல்லும். அப்போது கொஞ் சம் பிகுவு செய்து அப்பால் கல்யாணஞ் செய்து வைத்து விடுகிறேன். ஜோஸ்யர்களைச் சொன்னபடி ஆட்டிவைக் கும் ராமண்ணு நம் கையில் இருக்கும்போது இப்போதே நடேசனுக்கும் ராஜாம்பாளுக்கும் கல்யாணம் ஆனது போலவே எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். அப்படி என் சகோதரனுக்கு ராஜத்தைக் கல்யாணஞ் செய்து வைக்காவிட்டால் நான் எடுத்தது பெண் ஜன்மம் அல்ல’ என்று கனகவல்லி தனக்குள்ளாகவே யோசித்துப் புன் சிரிப்பாய்ச் சிரித்துக்கொண்டாள்.

3. ஜோஸ்யத் தரகர்கள்

மறுநாள் காலேயில் சாமிநாத சாஸ்திரி வெளியிற். போனவுடனே கனகவல்லி ஜகப் புரட்டு ராமண்ணுவை அழைத்து வரும்படி தனக்கு அந்தரங்கமான வேலேக் காரியை அனுப்பினள். அவள் போய் யாருக்குந் தெரியா மல், ராமண்ணுவைக் கூட்டிவந்து யாரும் அடிக்கடி போகாததோர் அறையில் அவரை வைத்துவிட்டுக் கணக. வல்விக்குச் சமாசாரம் தெரிவித்தாள். -

  • ராமண்ணு! வாருங்கள், வாருங்கள், உட்காருங்கள். பாவம், எங்கிருந்து நடந்து வந்தீர்களோ? அதிக சிரமமா யிருக்கும். கொஞ்சம் தாகசாந்தி செய்துகொள்ளுங்கள்’’ என்று சொல்லி எட்டுத் தோசை, பத்து இட்டிலி, பன்னி ரண்டு தயிர்வடை, பன்னிரண்டு சுகியன், ரவைலட்டு ஆறு, ஜிலேபி ஏழு, பூந்திலட்டு எட்டு ஆகிய இவைகளே ஒரு பெரிய தட்டில் வைத்துத் தாக்சாந்திக்காகச் சுமார் இரண்டு படி காபித் தண்ணீரும் கொண்டுவந்து அவர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/27&oldid=677393" இலிருந்து மீள்விக்கப்பட்டது