பக்கம்:ராஜாம்பாள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இராஜாம்டாள்

பக்கத்தில் கனகவல்லி வைத்தாள். ஐந்து நிமிஷத்தில் ராமண்ணு தட்டில் உள்ள பதார்த்தங்களே எல்லாம் ஒன்று விடாமல் பட்சித்துவிட்டுக் காபித் தண்ணிரையும் பூரா வாய்ச் சாப்பிட்டுவிட்டு, ‘இவ்வளவு சாப்பிட்டதற்கு அரைப்படி கோதுமை ரவையும் ஜவ்வரிசியும் போட்டுப் பால்விட்டுப் பாயசஞ் செய்து இத்துடன் கொடுத்திருந் தால் திருப்தியா யிருக்கும்’ என்று சொல்லிவிட்டுக் கைகால் சுத்தி செய்துகொண்டு, தாம்பூலம் தரித்துக் கொண்டார். - - r -

கனகவல்லி: ராமண்ணு! நீங்கள் எனக்கு ஒரு காரி யம் எப்படியாவது முடித்துக் கொடுக்கவேண்டும். இப் பேர்ப்பட்ட காரியங்களில் நீங்கள் அதிக சாமர்த்திய சாலி என்பது லோகப்பிரசித்தியே. - . . .

ராமண்ணு: சமாசாரஞ் சொல்லாமல் முடித்துக் கொடு என்கிருயே? என்ன முடிக்கச் சொல்லுகிறாய்? என்னல் ஆவதாயிருந்து, அதற்குத் தக்கபடி செலவுகள் செய்வதாயிருந்தால் நான் முடிப்பதில் என்ன தடை இருக்கப்போகிறது? நான் செய்வேன், செய்ய மாட்டே னென்று உனக்குத் தெரியாதோ? மேல்வீட்டுச் சுப்பையர் பெண்ணே யாரும் கல்யாணஞ் செய்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிக் கழித்துவிட்டார்களே! சுப்பையர் பத் துப் பை* வெளியே கிளப்பினர். பெண்ணையும் சொத்துக் காரன் வீடு சேரும்படி செய்துவிட்டேன். ராமசுப்பையர் மகனுக்குக் கண் குருடு என்று யாரும் பெண் கொடுக்க மாட்டேன் என்றார்களே. பன்னிரண்டு பை வெளியே கிளம்பவே, ஜட்ஜ் கோபாலையர்பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும்படி செய்தேன். மிராசு சொக்கலிங்கம் பிள்ளையைக் கொண்டுவந்து சேர்க்கும்படி தாசி செல்லம் எத்தனையோ பேருக்குப் பணங்கொடுத்தாள். யாராலாவது முடிந்ததா? சொக்கலிங்கம் பிள்ளையைப்போல் யோக்கியர் உலகத்திலேயே கிடையாது என்றும் பரஸ் திரீகளைக் கண் டால் தம் தாய்க்கு ஒப்பந்தமாய்ப் பார்க்கிறவரென்றும் இந்த ராஜதானி பூராவும் அறியுமே. அப்பேர்ப்பட்டவர் தாசி செல்லம் வீடு எப்படிச் சேர்ந்தார்? எட்டுப் பையைக்

  • ஒரு பை என்பது 500 ரூபாய்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/28&oldid=677394" இலிருந்து மீள்விக்கப்பட்டது