பக்கம்:ராஜாம்பாள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

ஜோஸ்யத் தரகர்கள் 25

கிளப்பிக்கொண்டு சேர்த்தேன். இதெல்லாம் போகட்டும்; எட்டு வயதில் தாலி அறுத்துத் தேவலோகத்து ஸ்திரீயைப் போல் இருந்த லட்சுமி தரங்கம் பாடி உலகநாத முதலி யார் மேல் ஆசைவைத்து அன்னந் தண்ணிரில்லாமல் அவ இப்பட்டாளே. அவர்களே எப்படிச் சேர்த்துவைத்தேன்? லட்சுமியிடத்தில் ஐந்து பையும் முதலியாரிடத்தில் ஐந்து பையும் வாங்கிக்கொண்டு முடித்துவிட்டேன். ராமண்ணு வால் முடியாத சங்கதி ஒன்று உலகத்தில் உண்டோ? இன் னும் நான் செய்திருக்கும் சங்கதிகளைச் சொல்லிக்கொண் டிருந்தால் இந்த வருஷமெல்லாங்கூடக் காணுது. நடக்க வேண்டிய சங்கதியுஞ் சொல்லி எத்தனை டை தளர்த்து கிருயென்றும் சொன்னல் பைகளின் கனத்திற்குத் தக்க படி முடியும் முடியாது என்று சொல்லிவிடுகிறேன்.

கனகவல்லி: தங்களிடத்தில் சொல்லாத ரகசியம் என்ன இருக்கிறது? எங்கள் அகத்துக் கிழவர் ராஜாம் பாளை நடேசனுக்குக் கொடுக்கக்கூடாதென்று சொல் விக் கோபாலனுக்குக் கொடுக்கவேண்டுமென்று ஏற்பாடு செய்கிறார், நாளேக் குக் கிருஷ்ணமாசாரியையும், சுப்பிர மணிய சாஸ்திரிகளையும் கூப்பிட்டு ஜாதகங்கள் பார்க்கப் போகிறார், ஜாதகங்களைப் பார்த்துவிட்டுக் கோபால னுக்கும் ராஜாம்பாளுக்கும் பொருத்தமில்லை என்பதாக வும், கோபாலனுக்கு ராஜாம்பாளைக் கல்யாணஞ் செய் தால் மூன்று மாதத்திற்குள் அவள் இறந்து போவா ளென்றும் அவர்கள் சொல்லும்படி நீர் செய்யவேண்டும். என்னிடம் பணம் காசு அதிகமில்லையென்பது உமக்கு நன்றாய்த் தெரியும். எப்படியாவது ஒரு பை கொடுத்து விடுகிறேன், -

ராமண்ணு: கோபாலனும் ராஜாம்பாளும் மிகவும் நல்லவர்கள். அப்படியிருக்க அவர்களுக்கு விரோதமாய்ச் செய்வதானால் என் மனம் எப்படி ஒப்பும்? மேலும் ஜோஸ்யம் பார்ப்பதே மகா பாவம்; அப்படியிருக்க உள் ளதை இல்லையென்று ஜோஸ்யர்கள் சொல்லுவார்க ளாகில் அதற்கு மேற்பட்ட பாவம் உலகத்திலேயே கிடை யாது. இந்த வேலை என்னுல் முடியாது; வேறு யாரை ‘யாவது வைத்துச் செய்துகொள். வேண்டுமானல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/29&oldid=677395" இலிருந்து மீள்விக்கப்பட்டது