பதிப்புரை
ஆங்கில இலக்கியத்தில் துப்பறியும் கதைகளுக்கும் நாவலுக்கும் தனி இடம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. புகழ் பெற்ற ஸ்டிராண்டு என்னும் ஆங்கிலப் பத்திரி கையின் மூலம் அற்புதமான துப்பறியும் கதைகளே எழுதி யவர் கானன் டாயில். அவருடைய துப்பறியும் நிபுணன் ஷெர்லாக் ஹோம்ளை ப்போல மறக்க முடியாத பாத் திரத்தை யாருமே சிருஷ்டித்ததில்லை. மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரையில் எல்லோருக்கும் உற். சாகத்தை ஊட்டும் ஷெர்லாக் ஹோம் லைப் போலவே தமிழ்நாட்டிலும் துப்பறியும் கோவிந்தன் என்னும் பெயர் அமைந்துவிட்டது.
தமிழ் நாவல்கள் படித்தவர்களின் நெஞ்சை விட்டு நீங்காத இடம் பெற்றுவிட்ட கோவிந்தனைப் படைத்த பிரம்மா பூர், ஜே. ஆர். ரங்கராஜு. அவர் எழுதிய நாவல்கள் பல பதிப்புக்கள் அச்சாகி மக்களுக்கு இன்ப மூட்டியிருக்கின்றன. சந்திரகாந்தா இராஜாம்பாள், மோகனசுந்தரம் போன்ற நாவல்கள் சினிமாவின் மூல மாகவும் புகழைப் பெற்றிருக்கின்றன. பூர் ஜகதாபி ரகுபதி ரங்கராஜு-ஆம், இந்த நீண்ட பெயரையே ஜே. ஆர். ரங்கராஜு என்று அழைக்கிருேம்-எழுதிய இந்த நாவல் கள் பல வருடங்கள் மறு பதிப்பு ஆகாமல் இருந்தன. இப் பொழுது அவற்றை நாங்கள் ஒவ்வொன்முக வெளியிட எண்ணியிருக்கிருேம். இது முதல் புத்தகம். -
-பதிப்பாளர்