பக்கம்:ராஜாம்பாள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இராஜாம்பாள்

போகிற வழியில் ஜோஸ்யர்கள் இருவரையும் உன்னிடம் அனுப்பிவிடுகிறேன்; நீயே நேரில் பேசிக்கொள்.

கனகவல்லி: உங்களால் முடியாதது ஒ ன் று. உண்டோ? அவர்களை இங்கே வரச்சொன்னுல் கிழட்டுப் பிராமணர் சந்தேகப்படமாட்டாரோ? எல்லாம் தெரிந் திருந்தும் நீர் இப்படிச் சொல்வதெப்படி? இரண்டு பையாவது கொடுத்துத் தொலைக்கிறேன்.

ராமண்ணு: இந்தக் கிழட்டுப் பிராமணன் கூப்பிடும் ஒவ்வொரு ஜோசியருக்கும் இரண்டு பை வீதம் நீ கொடுப்பதாக ஒப்புக்கொள்வதாயிருந்தால் நான் தலை கொடுக்கிறேன். நீ எனக்கு ஒன்றும் கொடுக்கவேண் டாம். இல்லாவிட்டால் என்னுல் முடியவே முடியாது.

கனகவல்லி: சரி, அப்படியே கொடுக்கிறேன். எப்படி யாவது முடித்துவிட வேண்டியது உம்மைச் சேர்ந்த வேலை. - -

ராமண்ணு கனகவல்லியிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குப் போனார், வீட்டில் காஞ்சீபுரம் கஸ்பா சப்மாஜிஸ்டிரேட் ஆபீஸ் சேவகர்கள் இருவர் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் ராமண்ணுவுக்கு மிக்க பயமுண்டாகி உடம்பெல்லாம் ஸ்நானம் செய்ததுபோல் வேர்வை வடிய ஆரம்பித்து விட்டது. அவர்களைக் கண்டு என்ன சமாசாரம் என்று கேட்டார். அவர்கள் , யஜமான் தங்களைக் கையோடு கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்’ என்றார்கள். ‘என்னப்பா, சம்மன் கொண்டுவந்தீர்களா? அல்லது வாரண்டு கொண்டுவந்திருக்கிறீர்களா? உண்மையைச் சொல்லிவிடுங்கள். நானே ஏழைப் பிராமணன்; யாருக் கும் ஒரு கெடுதியும் செய்யாதவன். என்மேல் யாராவது அபாண்டமாய் எஜமானிடம் ஏதாவது சொன்னர்களா? நீங்கள் எப்போதும் அவரிடம் இருக்கப்பட்டவர்க ளாயிற்றே , உங்களுக்குத் தெரியுமே; சொல்லக்கூடாதா? சொன்னல் ஓர் அணுக் கொடுக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு தம் மனத்திற்குள், நான் செய்திருக்கும் அநேக அக்கிரமங்களில் எது வெளிக்கு வந்துவிட்டதோ தெரியவில்லையே! இந்தச் சப் மாஜிஸ்டிரேட் ஆயிரம் ஆயி ரமாக லஞ்சம் வாங்குகிறவன் என்கிறார்களே, அவன் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/30&oldid=677396" இலிருந்து மீள்விக்கப்பட்டது