பக்கம்:ராஜாம்பாள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோஸ்யத் தரகர்கள் 29 ஒரு கை பார்த்துக்கொள்கிறேன்’ என்று யோசனை செய்துகொண் டிருந்தார்.

ராமண்ணு: எஜமானவர்கள் நாயாகிய என்னை ஒரு பொருட்டாக எண்ணிக் கூப்பிட் வைத்தபோதே எனது ஜன்மம் சாபல்யமாகிவிட்டது. இந்த நாய் செய்ய வேண்டிய வேலே உத்தரவாளுல் உடனே முடித்துவிடும்.

நீலமேக சாஸ்திரி. ஒய் ராமண்ணு, நான் பேச்சு வளர்க்கப்பட்டவனல்ல. சுருக்கமாய்ச் சொல்லுகிறேன். ஜாக்கிரதையாய்க் கேளும். சாமிநாத சாஸ்திரி பெண் ராஜாம்பாளைக் கோபாலனுக்குக் கொடுக்க உத்தேசித்து நாளை ஜாதகங்கள் பார்க்கப் போகிரு.ர்களாம். எப்படி யாவது அவர்கள் இருவருக்கும் பொருத்தமில்லை என்று ஜோஸ்பர்களை விட்டுச் சொல்லச்சொல்லி அந்தப் பெண்ணை எனக்குக் கல்யாணஞ் செய்து வைத்துவிட வேண்டியது. இந்த வேலை உம்மால் ஆகுமே யல்லாமல் வேறே யாராலும் ஆகாது. நீர் முடித்துக் கொடுத்தால் உமக்குச் சரியானபடி இனம் அளிக்கிறேன்.

ராமண்ணு: தங்களுடைய கியாதி இந்த ராஜதானி பூராவும் பரவியிருக்கிறது. தாங்கள் போலீஸ் இன்ஸ்பெக் டரைக் கூப்பிட்டு, ஏதாவது கொள்ளைக் கேசில் கோபா லனைச் சம்பந்தப்படுத்திச் சிறையில் அடைத்துவிட்டால் அப்பால் அவனுக்குப் பெண் கொடுக்கமாட்டார்கள். நடேசனுக்குக் கொடுப்பதில் லே என்று கிழட்டுப் பிணம் சொல்லிக்கொண் டிருக்கிறது. அப்பால் தாங்கள் பெண் கேட்டால் கொடுத்து விடுவார்கள். தங்களுக்கு என்ன குறைவு இருக்கிறது? பத்துலட்ச ரூபாய் சம்பாதித்திருக் கிறீர்கள். வர்ணத்திலோ சாrாத் கண்ணனை ஒத்திருக் கிறீர்கள். ரூபத்தில் தங்களைப் பார்த்த பெண்கள் இன் ளுெருதரம் திரும்பிப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள். எல்லாரும் விரும்பத்தக்க கெளரவமான சப் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் வகிக்கிறீர்கள், இவ்வளவிருந்தும் தாங் கள் என்னிடம் சொல்வானேன்? ஜோஸ்யர்களைக் கூப்பிடவாவது, அவர்கள் பொருத்தமில்லை என்று. சொல்லவாவது! இது நடக்கப்பட்ட சங்கதியோ? நியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/33&oldid=677399" இருந்து மீள்விக்கப்பட்டது