பக்கம்:ராஜாம்பாள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோஸ்யத் தரகர்கள் 33

உண்டான் தின்பான் பைராகி, குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி’ என்பதைப்போல் ஐந்து வயது முதல் சாமி நாத சாஸ்திரி சொத்தைப் பலமாய்த் தின்றுவிட்டு இன்று கொஞ்சம் பிரதிகூலமாகச் சொல்லவேண்டியதை என்னைச் சொல்லச் சொல்லுகிறீரே. இது தர்மமா? இப்படி இன் ளுெரு தரஞ் சொன்னுல் அப்பால் உம்முடைய முகத்தி லேயே நான் விழிக்கமாட்டேன். -

கிருஷ்ணமாசாரி, நீர் என் முகத்தில் விழிக்காவிட் டால் அத்தோடு என் அதிருஷ்டமே போய்விடும்போல் இருக்கிறது. அந்த மட்டும் வாயை மூடும். -

இப்படிக் கிருஷ்ணமாசாரியார் சொன்னவுடனே சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு அதிகக் கோபம் வந்து, நேற்றுப் பிறந்து கோவணங் கட்டத் தெரியாத சின்னப் பயலோடு கூட வந்ததாலல்லவா இவ்வளவு பேசிய்ை?’’ என்று சொல்லி, கிருஷ்ணமாசாரியைக் கன்னத்தில் ஓர் அறை அறைந்தார். உடனே கிருஷ்ணமாசாரியரும் சுப் பிரமணிய சாஸ்திரிகளை இரண்டு அறை கொடுத்தார். மத்தியில் உட்கார்த்திருந்த ராமண்ணு இருவரையும் சமா தானப்படுத்தப் போகையில் இருவருஞ் சேர்ந்து அவரைப் புடைத்தார்கள். அப்பால் சாமிநாத சாஸ்திரி எல்லாரை யுஞ் சமாதானப்படுத்திச் சிறிது கோபத்துடன், என் ஏக புத்திரிக்குக் கல்யாணம் செய்ய ஜாதகம் பார்க்கச் சொன்னுல் பிராமணர்கள் என்ற உயர்குலத்தோருக்குரிய நடை நொடி பாவனைகளை விட்டுக் கேவலம் மிலேச்சர் களைப் போல் நடந்துகொண்டீர்களாகையால் உங்கள் அபிப்பிராயம் கேட்பதில் பிரயோஜனம் இல்லை’ என்று சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார். அப்படிச் சாமிநாத சாஸ்திரி சொன்னவுடனே ராமண்ணு, ‘நாம் கொஞ்சம் ஜாஸ்தியாய்ப் போய்விட்டோம்: இப்படியெல்லாஞ் செய்தால், நீ சொல், நீ சொல்: என்று அடித்துக்கொண்டார்களே, இதில் எவ்வளவு கெடுதல் இருக்குமென்று நினைப்பானென்று செய்யச் சொன்னேனே. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்ததே? இன்னும் நான் சும்மா இருந்தால் எல்லாரை பும் எழுந்து போகச் சொல்லிவிட்டு வேறு ஜோசியர் கனைக் கூப்பிட்டால் அவர்கள் என் பேச்சைக் கேட்பார்

. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/37&oldid=677403" இலிருந்து மீள்விக்கப்பட்டது