பக்கம்:ராஜாம்பாள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 இராஜாம்டாள்.

களோ என்னவோ?’ என்று யோசனை செய்துகொண்டே இருவரையும் சமாதானப் படுத்துவதைப்போல் சமா தானப்படுத்தி இருவரையும் சாமிநாத சாஸ்திரியிடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்தார். அப்பால் சாமிநாத சாஸ்திரி சற்றுக் கோபம் தீர்ந்து உள்ளதைச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். . -

சுப்பிரமண்ய சாஸ்திரிகள்: எல்லாஞ் சரியாய்த் தான் இருக்கிறது. ஆனல் லேசாய்ச் செவ்வாய் தோஷம் மாத்திரம் இருக்கிறது,

கிருஷ்ணமாசாரி: ஏங்காணும், அப்படிச் சொல்லு” கிறீர்? லேசாய்ச் செவ்வாய் தோஷம் இருக்கிறதென்றீரே! கண்டிப்பாய்ச் செவ்வாய் தோஷம் இருக்கிறதென்றும் கோபாலனுக்குக் கல்யாணஞ் செய்தால் கட்டாயமாய்ப் பெண் ஆறுமாதத்திற்குள் இறப்பாளென்றும் சொல்லுமே. ராமண்ணு: ஒய் கிருஷ்ணமாசாரி, செவ்வாப் தோஷம் இருக்கிறதென்றால் யாருக்குந் தெரியாதா? ஏன் இவ்வளவு பச்சையாய்ச் சொல்லுகிறீர்! உமக்குக் கொஞ்ச மாவது புத்தியில்லேகாணும் !

கிருஷ்ணமாசாரி: சாமிநாத சாஸ்திரிகள் உண்மை யைச் சொல்லச்சொன்னதால் சொல்லிவிட்டேன். நான் மாத்திரம் முகஸ்துதியாய்ப் பேசுகிறவனல்லவென்று எல்லாருக்குத் தெரியுமே. உண்டு என்றால் உண்டு என்பேன்; இல்லை என்றால் இல்லை என்பேன். மற்றவர். களைப்போல் வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதைப்போல் எனக்குப் பேசத் தெரியாது,

இதைக் கேட்டவுடனே சாமிநாத சாஸ்திரிக்குச் சற்று விசனமும் சந்தேகமும் பிறந்தன. ஏனென்றால், முன்னுல் ஒரு தரம் கும்பகோணம் ஜ்யோதிஷபாஸ்கர நீலமேக சியாமளவர்ண திருநீலகண்ட சாஸ்திரிகள் இந்த ஜாதகங்களேப் பார்த்தபோது பொருத்தம் சரியாயிருக் கிறதென்றும். எந்த விதமான குற்றமும் சொல்லக்கூடா தென்றுஞ் சொல்லியிருந்தார். ஆகையால் இந்த ஜோஸ் யர்களிடம் அதெல்லாம் ஒன்றும் சொல்லாமல் அவிர்வர் களுக்குத் தக்க மரியாதைகள் செய்து அனுப்பிவிட்டுச் சாமிநாத சாஸ்திரி கும்பகோணத்திலிருக்கும் தம் இஷ்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/38&oldid=677404" இலிருந்து மீள்விக்கப்பட்டது