பக்கம்:ராஜாம்பாள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோஸ்யத் தரகர்கள் 35

ரான பாலகிருஷ்ணமூர்த்திக்குப் பின்வருமாறு தந்தி கொடுத்தார்: - -

இந்தத் தந்தி கண்டவுடனே கும்பகோணம் ஜோசி யரான நீலகண்ட சாஸ்திரிகளைக் கையோடு கொண்டு வருவதன்றி அவரைப் பார்த்த நிமிஷம் முதல் அவர் யாரோடும் பேசாதபடி ஜாக்கிரதையாகக் கூட்டிக் கொண்டு வரவேண்டியது.” - சாமிநாத சாஸ்திரி கொடுத்த தந்தி வந்து சேர்ந்த வுடனே பாலகிருஷ்ணமூர்த்தியும் சாஸ்திரிகள் சொன்ன பிரகாரமே தம் சாமர்த்தியத்தால், நீலகண்ட சாஸ்திரிகள் வேறே யாருடனும் பேசாதபடி காஞ்சீபுரம் கொண்டு போய்ச் சேர்த்தார். -

தந்தி கொடுத்த சமாசாரம் ராமண்ணுவுக்கு எப்ப டியோ தெரிந்து கும்பகோணத்திலிருந்து வரும் வழியில் எவ்வகையிலாவது நீலகண்ட சாஸ்திரிகளைக் கண்டு பொருத்தம் இல்லை என்று சொல்லும்படி ஏற்பாடு செய்யச்சொல்லித் தம் சிஷ்யர்களில் ஒருவரை அனுப்பி ஞர். ஆனல் கிருஷ்ணமூர்த்தியோ யாரையும் சாஸ்திரி களின் பக்கத்தில் நெருங்கவிடவில்லை. சிஷ்யன் உபகார மின்றியே திரும்பிவந்து நடந்த விருத்தாந்தங்களைச் சொன்னவுடன்ே ராமண்ணு, உன்னைச் சாமர்த்தியசாவி என்று நினைத்திருந்தேன்; ஆளுல் கடைசியில் நீ அவ்வளவு கெட்டிக்காரனல்லவென்று ருஜPப்படுத்தி விட்டாய். இதற்குள் ஜாதகம் பார்க்க ஆரம்பித்து விடுவார்களா கையால் நான் இனி அஸ்வாரசியமாக இருந்தால் எனக் குப் பண நஷ்டமாவதன்றிக் கேவலமும் சம்பவிக்கும்’ என்று சொல்லிக்கொண்டே அவசரமாகச் சிறு கடித மொன்று எழுதிக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய்த் தண்ணிர்ப் பாம்பு ஒன்றைப் பிடித்து வாழையிலையிற் பொதிந்து மடியில் வைத்து மேலே போட்டிருக்கும். அங்கவஸ்திரத்தால் மூடிக்கொண்டு சாமிநாத சாஸ்திரி களின் வீடுபோய்ச் சேர்ந்தார். இதற்குள்ளாக நீலகண்ட சாஸ்திரிகள் ஜாதகங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். முன்னுல் ஜோசியம் பார்த்துச் சொன்ன இரண்டு ஜோசி யர்களும் ஒருவர் முகத்தை ஒருவர். பார்த்துக்கொண்டு, “இன்றே நாம் இந்த ஊரை விட்டு வேறு எங்கேயாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/39&oldid=677405" இலிருந்து மீள்விக்கப்பட்டது