பக்கம்:ராஜாம்பாள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: & ... * 35 இச்சிஜாமடாள்

ஒடிப்போக வேண்டியதுதான். தமது மோசம் இனிக் கொஞ்ச நேரத்தில் வெளியாகிவிடப்போகிறது என்று நினைத்துக்கொண் டிருக்குஞ் சமயத்தில் ராமண்ணு வரவே, அவரைக் கண்டதும், இவர் ஏதாவது ஏற்பாடு செய்தி ருப்பார். இல்லாவிட்டால் தைரியமாய்ச் சபைக்கு வர மாட்டார்’ என்று சற்றுத் தைரியமாக இருந்தார்கள். ராமண்ணு வந்ததும் நீலகண்ட சாஸ்திரிகள் பக்கத்தில் வந்து உட்கார வந்தார். ‘ஆல்ை கிருஷ்ணமூர்த்தியோ அவரைச் சாஸ்திரிகள் பக்கத்தில் உட்காரவிடாமல் அதிக மரியாதையாய்த் தம் பக்கத்தில் உட்காரும்படி அழைத்து உட்காரச்சொன்னர். ராமண்ணு வந்து ஐந்து நிமிஷங் களுக்கப்பால் திடீரென்று எல்லாருக்கும் மத்தியில் ஒரு பாம்பு ஒட ஆரம்பித்தது. பாம்பென்றால் படையும் நடுங் குமே. உட்கார்ந்திருந்தவர்களில் சிலர் ஓட ஆரம்பித் தார்கள். சிலர் தடி எடு என்றார்கள். அதற்குள் தடி எடுக்கச் சென்றவர்களில் ஒருவர். ‘நீ அடிக்கப் போகாதே’ என்றார், சிலர், வேலைக்காரனைக் கூப்பிட்டு அடிக்கச்சொல்’’ என்றார்கள். ஆக இப்படி அல்லோவ கல்லோலப்படுஞ் சமயத்தில் ராமண்ணு எழுதிக்கொண்டு வந்திருந்த கடிதத்தை யாரும் பார்க்காதபடி நீலகண்ட சாஸ்திரிகளிடம் கொடுத்துவிட்டார். ஆபத்துக்குப் பாவம் இல்லையாதலால் தெருவில் இருந்த பறை முனிசாமி இள்ளே போய்ப் பாம்பை அடித்து வெளியே கொண்டு போனன்.

நீலகண்ட சாஸ்திரிகள் கையில் கொடுக்கப்பட்ட கடி தத்தின்மேல், ஜாக்கிரதை இந்தக் கடிதத்தை வாசித் துப் பார்த்துவிட்டு மறுகாரியம் பார்க்கவேண்டியது. ரக சியமான விஷயமாதலால் இந்தக் கடிதம் உம்மிடம் இருப் பதே யாருக்குந் தெரியக்கூடாது’ என்று எழுதியிருந் தது. எல்லோரும் அவரவர்களுடைய ஸ்தானங்களில் அமர்ந்தார்கள். நீலகண்ட சாஸ்திரிகள் மட்டும் வெளி வில் போய்வர வேண்டுமென்றார், கிருஷ்ணமூர்த்தி தாமுங் கூட வருவதாகச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு போய் வீட்டிலுள்ள கக்கூசைக் காண்பித்து உள்ளே போய்ப் பாதை நிவாரணஞ் செய்துகொள்ளும் படி சொல்லி வெளியே காவலிருந்தார், சாஸ்திரிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/40&oldid=677406" இலிருந்து மீள்விக்கப்பட்டது