பக்கம்:ராஜாம்பாள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோஸ்வத் தரகர்கள் 3?

கக்கூசுக்குள் போனவுடனே கடிதத்தைத் திறந்து பார்த் தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது :

இந்த ஊர் சப் மாஜிஸ்டிரேட்டாருடைய ந.ை நொடி பாவனைகளும் குணமும் உமக்கு நன்முய்த் தெரி யுமே. மேலும் இக்கடிதம் உம் கையில் கொடுத்தவருடைய சுபாவமும் உமக்குத் தெரியும். கோபாலனுக்கும் ராஜாம்பாளுக்கும் பொருத்தமில்லை என்பதாகவும் செவ்வாய் தோஷம் இருக்கிறதென்றும் நீர் சொல்ல வேண்டியது. அப்படிச் சொன்னுல் ஆயிரம் ரூபாய் இந்தக் கடிதம் உமது கையிற் கொடுத்தவரிடம் நீர் பெற்றுக்கொள்ளலாம். அப்படிச் சொல்லாமல் வேறு விதமாக நீர் சொல்லும் விஷயத்தில் சாக்ஷாத் பூரி நவநீத கிருஷ்ணன் ஆணே, நீர் திரும்பிப் போய் உம் பெண்சாதி பிள்ளைகள் முகம் பார்க்கப் போகிறதில்லை. இது சத்தியம். சப் மாஜிஸ்டிரேட் எஜமா னவர்கள் உத்தரவு அப்படி ஆகியிருக்கிறது. பொருத்தம் இருக்கிறதென்று சொன்னீராகில், நீர் சொல்லிவிட்டு வெளியே வருவதற்குள் நீர் கொள்ளை வழக்கில் சம்பத் தப்பட்டதாக வாரண்டு கொண்டுவந்து உம்மைப் பிடித் துக்கொண்டு போய்விடுவார்கள். அப்பால் போலீஸ் ஸ்டேஷனில் செய்யும் இம்சைகள் நான் சொல்வி உமக்குத் தெரியவேண்டியதில்லை. இதற்குச் சாட்சி, தெரு வில் சிவப்புத் தலைப்பாகைக்காரன் தயாராயிருக்கிருன், பார்த்துக்கொள்ளும் . நீர் சொன்னதற்குமேல், நான் போய்விடு என்று சொன்னுல் போவான். கண்ணக் காண்பித்தேளுகில் உம்மை மாட்டிவிடுவான். ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சந்தோஷமாய்ப் போக இஷ்டமிருந்தால் போம். இல்லாவிட்டால் கொள்ளை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு ஜெயில் போய்ச் சேர இஷ்டமிருந்தால் சேரும். இக்கடிதத்தை உடனே கிழித்தெறிந்துவிட வேண்டியது: :

வாசித்துப் பார்த்தவுடனே நீலகண்ட சாஸ்திரிகள், ‘ஏதடா, விபரீதமாய் முடிந்துவிட்டதே இப்படிப் பார்த் தால் ஸ்திரீஹத்தி, அப்படிப் பார்த்தால் பிரம்மஹத்தி: என்பார்களே அது சரியாய் முடிந்துவிட்டதே. ராஜாம்பாளும் கோபாலனும் மெத்த நல்லவர்கள். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/41&oldid=677407" இலிருந்து மீள்விக்கப்பட்டது