பக்கம்:ராஜாம்பாள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 இராஜாம்பாள்

களுக்கு விரோதமாய் நாம் சொல்லவே கூடாது. அப்படிச் சொல்லாவிட்டால் இந்தப் பாவி சப் மாஜிஸ் டிரேட் ஜெயிலில் அடைத்துவிடுவானே அந்தச் சண் உாளன் சொன்னல் சொன்னபடி செய்பவனுயிற்றே. ஜகதீசா என்னை இப்படி ஆபத்திற்குள் கொண்டுவந்து விட்டு விட்டாயே; என்ன செய்வேன்!” என்று வருத்தப் பட்டுச் சற்றுநேரம் யோசனைசெய்து இருகட்சியாருக்கும் சங்கடமின்றி நடந்துகொள்வதாகத் தீர்மானித்துக் கொண்டு வந்தார். -

தம் ஆசனத்தில் வந்து உட்கார்ந்து சற்று நேரம் ஜாதகங்களைப் பார்த்துவிட்டுத் தாகத்திற்குக் கொஞ்சம் ஜலம் கொண்டுவுரச் சொல்லிச் சாப்பிட்ட நீலகண்ட சாஸ்திரிகள், பாதி ஜலம் சாப்பிட்டவுடனே செம்பைக் கீழே சோரவிட்டுத் திடீரென்று பின்னுல் சாய்ந்து விட்டார். மூச்சும் இல்லை, பேச்சும் இல்லை. உடனே டாக்டரை அழைப்பித்துப் பார்க்கச் சொன்ஞர்கள், அவரும் கைநாடி, கால் நாடி பார்த்து, மார்பில் யந்திரம் வைத்துப் பிராணவாயுபோல் இருக்கிறது என்று சொல்லி மருந்து எழுதிக் கொடுத்து ஆஸ்பத் திரியில் மருந்து வாங்கி வரும்படி செய்து, மருந்து கொடுத்து வந்தார். மூன்று நாளாகியும் வாயைத் திறக்க வில்லை. அப்பால் சாமிநாத சாஸ்திரி, பொருத்தம் இருந்தாலுஞ் சரி, இல்லாவிட்டாலுஞ் சரி, ராஜாம் பாளைக் கோபாலனுக்குக் கல்யாணம் செய்துகொடுக்கப் போகிறேன்’ என்று முரட்டுத்தனமாய் ஒரே பிடியாய்ச் சொல்லிக் கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும்படி கனகவல்லிக்குச் சொன்னதுடன் தாமும் நடக்கவேண்டிய காரியாதிகளைச் செய்துகொண்டிருந்தார்.

4. போலீஸ் அகியாயங்கள்

இப்படிச் சாமிநாத சாஸ்திரி பொருத்தம் இருந்தா லும் இல்லாவிட்டாலும் கோபாலனுக்கே பெண்ணைக் கொடுக்கத் தீர்மானித்து விட்டாரென்ற சமாசாரம் சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரிகள் காதில் விழுந்தவுடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/42&oldid=677408" இலிருந்து மீள்விக்கப்பட்டது