பக்கம்:ராஜாம்பாள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அகியாயங்கள் 33

ராமண்ணுவைக் கூட்டிக்கொண்டு வரச்சொல்லி, இனி என்ன செய்தால் தமக்கு இராஜாம்பாளேக் கல்யாணஞ் செய்து கொடுப்பார்களென்று யுக்தி கேட்டார்,

ராமண்ணு: எஜமானவர்களுக்குத் தெரியாத யுக்தி நான் என்ன சொல்லப்போகிறேன்? இருந்தாலும் இந்த நாயை ஒரு பொருட்டாக எண்ணிக் கேட்பதால் சொல்லு கிறேன். இனிப் போலீசார் தயவு இருந்தால்தான் இவ் விஷயம் அதுகூலமாகும். - * -- நீலமேக சாஸ்திரி: போலீசார் எப்படி அநுகூலம் செய்ய முடியும்? அப்படி அவர்களால் ஆகிறதாயிருந்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு என் இஷ்ட ராயிற்றே. போலீசார் வழக்குக் கொண்டுவந்தால் நான் ஒட்சை செய்கிறதே தவிர விடுவதில்லையே! போலீசார் காரணம் இல்லாமல் ஏன் ஒருவனேக் குற்றவாளியென்று கொண்டுவருவார்கள்? அவர்களுக்குப் பைத்தியம் பிடித் திருந்தால் அல்லவா அநியாயமாய். யாரையாவது கொண்டுவந்து விடுவார்கள்? ஆகையால் அவர்களெல் லாருக்கும் என்மேல் பிரியம் அதிகம். என் சங்கதியைத் தம் சங்கதியாகப் பாவித்து மணவாள நாயுடு செய்து விடுவார். என்ன செய்யச் சொல்லுகிருயோ சொல். இப்பொழுதே செய்யச் சொல்கிறேன். யாரடா சேவகன்? ராமண்ணு: கொஞ்சம் பொறுங்கள். ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காதா? முதலில் இன்னது செய்கிறதென்று நன்றாகத் தீர்மானஞ் செய்துகொண்டு அப்பால் அவரைக் கூப்பிட்டு வரச்சொல்லுங்கள்.

நீலமேக சாஸ்திரி: தீர்மானஞ் செய்கிறது என்ன இருக்கிறது?

ராமண்ணு: முதலில் இன்ன வழியாய்ச் செய் கிறதென்று ஏற்பாடு செய்யவேண்டும். இரண்டாவது, அந்த ஏற்பாடுகளையெல்லாம் தாங்களே நேரில் செய்யப் போகிறீர்கள்ா அல்லது இந்த நாயைச் செய்யச் சொல்லு கிறீர்களா என்பது. மூன்றாவது, என்னைச் செய்யச் சொன்னுல் அவர்களுக்கு எவ்வளவு இனம் அளிக்க உத்தே சித்திருக்கிறீர்களென்பதும் தீர்மானஞ் செய்யவேண்டும், நீலமேக சாஸ்திரி: இந்த வழியாய்ச் செய்யவேண்டு மென்று நீ சொல். நானே. ம்ணவாள நாயுடுவைக் கூப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/43&oldid=677409" இருந்து மீள்விக்கப்பட்டது