பக்கம்:ராஜாம்பாள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



போலீஸ் அகியாயங்கள்

நகைகளை வாங்கி மறைத்துவைத்த குற்றத்திற்காகச் சாமிநாத சாஸ்திரியைப் போலீஸ் கொட்டடியில் கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவர் பெண்ணேத் தங்களுக்குக் கல்யாணஞ் செய்துகொடுக்க ஒப்புக்கொண் டால் விட்டுவிடுவதாகவும், இல்லாவிட்டால் விடமாட் டார்களென்றும் பயமுறுத்தினுல் கட்டாயமாய் ஒப்புக் கொள்வார். ஒரு தரம் வாக்களித்தால் அப்பால் தம் பிராணன் போனலும் சாமிநாத சாஸ்திரி புரண்டு பேச i HAF .— i.-.—F FF • - . -

நீலமேக சாஸ்திரி. ஆனல் இப்போதே மணவாள நாயுடுவை அழைத்துவரச் சொல்லி, நடக்கவேண்டிய தெல்லாம் சொல்லிவிடுகிறேன். நான் சொல்லுகிறதைக் கட்டாயமாய் நாயுடு செய்தே தீர்ப்பான்.

ராமண்கு : தங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; நான் போகிறேன்.

நீலமேக சாஸ்திரி : நீயும் இருந்து சொல் விவிட் டுப் போ, .

ராமண்ணு: சரி சரி, பேஷ்! ஏன் இந்த ஏழைப் பிராமணன் பிராம்மணர்த்தம் தின்றுகொண்டு ஜீவிக்கிரு. னென்று என் வாயில் மண்போடப் பார்த்துவிட்டீர்கள் போலிருக்கிறதே! நன்றா யிருக்கிறது. ... • *

நீலமேக சாஸ்திரி என்ன! வாயில் வந்தபடி எல்லாம் பேசுகிறாய்! .

ராமண்ணு: நான் சொல்லும்வரை திருட்டுப் போன நகைகள் அகப்பட்ட சங்கதி தங்களுக்குத் தெரியுமா? நான் தங்களிடம் இதெல்லாம் சொன்னேனென்றால் மண்வாள நாயுடு என்ன்ை லேசில் விட்டுவிடுவானே! நாளே இந்நேரத்திற்குள் என்னைச் சிறையில் வைத்துவிட மாட் டானே? இல்லை, அப்படிக் கேட்டீர்கள். நகை ஏது, அகப்பட்டதேது?’ என்றுதான் சொல்லுவான். பொன் வாணிகர் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் எடுப்பார் கள்: ஆனல் போலீசாரோ தாயாராயிருக்கட்டும், பிள்ளையா யிருக்கட்டும், பாதி வாங்காமல் விடமாட்டார் கள். தங்களைப்போல் அந்தஸ்திலும் உத்தியோகத்தி லும் இருக்கிறவர்கள் இதைப்போலொத்த சங்கதிகளைச் சொன்னல் லஞ்சம் எனக்குக் கொடுக்கப் பிரயத்தனஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/45&oldid=677411" இலிருந்து மீள்விக்கப்பட்டது