பக்கம்:ராஜாம்பாள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அகியாயங்கள் 3

வெளியே அனுப்பிவிட்டு அப்பால் ராமண்ணுவிடம், * என்ன சம்ாசாரம்?’ என்று கேட்டார். -

ராமண்ணு: ஒன்றும் இல்லை; சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரியவர்களுக்குத் தங்களால் சிறு காரியம் ஒன்று ஆகவேண்டி யிருக்கிறது. அவர்கள் தாமாகச் சொல்வ தற்குச் சங்கோசப்பட்டுக்கொண்டு என்னைச் சொல்லச் சொன்னர்கள். -

மணவாள நாயுடு: சாஸ்திரிகள் மிகவும் நல்லவர் கள். நாம் கேஸ் கொண்டுபோளுல் தண்டிக்கிறதே தவிர, விடுவதே கிடையாது. அப்படி இருக்க அவர்களுக்கு ஆகவேண்டிய உபகாரம் நாம் செய்யவேண்டியதுதான். அற்ப விஷயமாயிருந்தால் எழுதி யனுப்பியிருப்பார். ஏதோ விசேஷம் இருப்பதால்தான் உன்னை அனுப்பியிருக் கிரு.ர். நீ யாருக்கு உபகாரஞ் செய்வதாய் வருகிருயோ அவர்களுக்குச் சனியன் பிடித்திருந்தால்தானே உன்னை யோசனை கேட்பது வழக்கம்? சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரி கள் பொருளை விரயஞ்செய்ய என்ன யோசனை செய்தி ருக்கிறாய்? உள்ளதைச் சொல்,

ராமண்ணு: இந்தப் பரம ஏழையின்பேரில் தாங்கள் அப்படி அபிப்பிராயப்பட்டது என் அதிருஷ்டந்தான். சுருக்கமாய்ச் சொல்லுகிறேன், கேளுங்கள். சாமிநாத சாஸ்திரி பெண் ராஜாம்பாளை நம் சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரிகள் கல்யாணஞ் செய்துகொள்ள உத்தேசித்துக் கோபாலனுக்கும் ராஜாம்பாளுக்கும் பொருத்தம் இல்லையென்று ஜோசியர்களைச் சொல்லச்சொல்லி ஏற் பாடு செய்யச் சொன்னர்கள். அவர் இஷ்டப்படியே செய்தேன். பொருத்தம் இருந்தாலும் இல்லாவிட்டா லும் கோபாலனுக்கே பெண்ணைக் கொடுப்பேனென்று சாமிநாத சாஸ்திரி ஒரே பிடிவாதம் செய்கிறார். அதன் பேரில் தங்கள் தயவு இருந்து தாங்கள் ஒத்தாசை செய் தால் மட்டும் இந்தக் காரியம் நடக்குமென்றும், இல்லா விட்டால் நடக்காதென்றும் கண்டிப்பாய்ச் சொன்னேன். அதன்பேரில் தங்களிடம் சொல்லி எப்படியாவது சாமி நாத சாஸ்திரியிடம் சப் மாஜிஸ்டிரேட்டாருக்கே பெண் கொடுப்பதாக வாக்குத்தத்தம் பெறுவதற்கு வேண்டிய காசியங்களைச்செய்து எப்படியாவது முடிக்கச் சொன்னர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/47&oldid=677413" இலிருந்து மீள்விக்கப்பட்டது