பக்கம்:ராஜாம்பாள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இராஜாம்பாள்

மணவாள நாயுடு: சரி, ஜோசியப்புரட்டில் உனக்கு எவ்வளவு அகப்பட்டது? சாமிநாத சாஸ்திரி சாமான், மானவரல்லவே! அவர் எனக்கு நிரம்ப வேண்டியவர். வருஷம் வருஷம் ஆறுமாதத்துச் சாப்பாட்டிற்கு வேண் டிய நெல் எனக்கு இனமாகக் கொடுத்துவருகிறார், இந்த ஊரில் நல்ல நெல் அகப்படுவதில்லையென்று அவர் காதில் விழும்படி நான் சொன்னல் உடனே மறுநாள் தெல் அனுப்பிவிடுகிரு.ர். நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என் னும் பயத்தால் அவர் அனுப்புவதில்லை. நூற்றுக்கண கான ஏழைகளுக்கு இனமாய்ச் சாப்பாட்டுக்கு நெல் கொடுப்பதைப்போல் எனக்கும் கொடுத்து வருகிரு மேலும், அவர் என் வார்த்தையைக் கேட்டுப் பெண்ணைக் சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரிகளுக்குக் கொடுப்பாரா? - ராமண்ணு: தங்களை நல்ல வார்த்தை சொல்லக் சொல்லவில்லை. பொன்விளைந்த களத்தூர்த் தீவட்டிக் கொள்ளைக் கேசில் அகப்பட்ட சில நகைகளை அவர் வீட்டில் வைத்து, இரண்டாம் பேருக்குத் தெரியாமல் அவரைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய் மாமூல் பிர் காரம் நடத்தினுல் ஒரு நாழிகையில் ஒப்பமாட்டாரோ?

மணவாள நாயுடு: சபாஷ்! நன்றாய்ச் சொன்னும்: அவரைப் பிடித்து இம்சிக்கும் சமாசாரம் வெளியே வந்து விட்டால் அவரிடம் தர்மம் வாங்கும் ஜனங்களெல்லாம் என்னைச் சும்மா விடுவார்களோ? போலீஸ் ஸ்டேஷனையே இடித்துத் துவம்சஞ் செய்துவிட மாட்டார்களோ? அவர் என்ன சாமானியமானவரா? நம் தேசத்தைத் தலைகீழாக மாற்றுவதாகச்சொல்லும் காங்கிரஸ் சபையில் சேர்ந்தவர் களிற் சிலர் இங்கே இருக்கிறார்களே, அவர்கள் சும்மர் இருப்பார்களோ? -

ராமண்ணு. தாங்கள் இப்பேர்ப்பட்ட இளநெஞ்ச ரென்று இன்றுதான் கண்டேன், புத்தி இல்லாத தம் பேதை இந்துக்களுக்கு அவ்வளவு கர்வமா? சர்க்கர மகிமையை நிலைநிறுத்தும் போலீஸ் வீரர்களின் தல்ை ராகிய தாங்கள் சாமிநாத சாஸ்திரியை அல்ல, இந் ஊரிலுள்ளவர்களை எல்லாம் பிடித்துக் கொட்டடியில் அடைத்தாலும் யாராவது பேசலாமா? ஜனக்கூட்டங் கூ இப்படிச் செய்வது நியாயம் அல்லவென்று பேசில்ை.அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/48&oldid=677414" இலிருந்து மீள்விக்கப்பட்டது