பக்கம்:ராஜாம்பாள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அகியாயங்கள் 45

கட்டத்தின் அக்கிராசனதிபதியைப் பிடித்து, விசாரணை செய்யாமலே பிடித்த பிடியிலேயே கண்காணுத தேசத் திற்குக் கொண்டுபோக 1818-ஆம் வருஷத்து மூன்றாவது ரெகுலேஷன் தங்களுக்கு இல்லையா? மேலும் போலீஸ் வீரர்களிடம் உள்ள துப்பாக்கிகளால் சுட்டால், கண்மூடி விழிப்பதற்குள் ஜனங்களெல்லாம் தலைமாடு கால்மாடாய்ச் சாய்ந்துவிட மாட்டார்களா? போலீசார் வசமிருக்கும் துப்பாக்கிகள் காணுவிட்டால் சென்னைக்குத் தந்தி கொடுத்தால் பட்டாளச் சிப்பாய்கள் வந்து ஊரில் உள்ள வர்களேயெல்லாஞ் சுட்டுக் கொன்றுவிட மாட்டார்களா? இன்னும் அதற்குமேல் போனுல் பீரங்கிகள் இல்லையோ? ஒரு நொடிக்குள்ளாக ஊர் இருந்த இடமே தெரியாமற். கட்டுப் பரத்திவிடாதோ? வாய்ச் சாமர்த்தியம் பேசுஞ் சில் படித்த முட்டாள்களுக்குப் பயந்து தாங்கள் பேசுவது ஆச்சரியமே, -

மணவாள நாயுடு; நீர் சொல்வதெல்லாம் வாஸ் தவமே. ஒருவேளை நமதுபேரில் திரும்பிலுைம் திரும்பு மல்லவா? அப்படித் திரும்புவது அபூர்வமானலும் ஒரு கால் திரும்பிவிட்டால் வேலை போய்விடுமே! அப்படி வேலை போய்விட்டால் வீட்டில் உட்கார்ந்து செளக்கிய மாய்ச் சாப்பிடுவதற்கு வேண்டிய பணம் வருவதாயிருந் தால் தலைகொடுக்கலாம். இல்லாவிட்டால் என்னுல் முடியாது. .

ராமண்ணு: தொகை அதிகம் வேண்டுமென்று சொல்வதற்காக இப்படியெல்லாம் பேசினதாக ஏற்பட்டு, விட்டது. சரி, தங்களுக்கு அந்த விஷயத்தில் ஆயாசம் வேண்டாம், ஐயாயிர ரூபாய் கொடுக்காவிட்டால் காரியம் முடியாதென்று சொல்லித் தீர்மானஞ் செய்து இதோ வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். மாமூல் பிர காரம் எனக்குச் சேரவேண்டிய நூற்றுக்கு ஐந்து கமிஷன் கொடுத்துவிடுங்கள்.

மணவாள நாயுடு. இன்னும் ஜாஸ்தி பேசியிருக்க லாம். இருந்தாலும் பரவாயில்லை. நான் கொடுக்கும் ஒரு சிறு மூட்டையை மாத்திரம் நீ கொண்டுபோ சாமிநாத சாஸ்திரி வீ. 3, ) * : ’

வைத்துவிட, o வே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/49&oldid=677415" இலிருந்து மீள்விக்கப்பட்டது