பக்கம்:ராஜாம்பாள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ஜ ம் ள்

1. ஸ்திரீ புருஷ சம்பாஷணை

என்ன அதற்குள்ளாகத் தூங்கிவிட்டீர்கள், இன் னும் எட்டு மணி அடிக்கவில்லையே. ஆனலும் தூக்கம் உங்களுக்கென்றுதான் அ ஸ் த மிக்கு மு ன் வந்துவிடு கிறதோ?’ என்று தன் பர்த்தாவாகிய சாமிநாத சாஸ்தி ரியை எழுப்பி, கனகவல்லி கேட்டாள். o

சாமிகாத சாஸ்திரி: நான் தூங்கின. பிற்பாடு என்னைத் தொந்தரவு செய்யாதே என்று உனக்கு நயத் திலும் பயத்திலும் பல முறை சொல்லியும் கவனியாமல் ராட்சசியைப்போல் பன்னிரண்டு மணிக்கு மேல் என்ன எழுப்பிப் பொழுது விடிகிறவரையில் ஏதாவது ஊர் வம்பு பேசுவதே உனக்கு வழக்கமாயிருக்கிறது. இந்தச் சனியன் எப்போது தொலையுமோ ! அன்றல்லவோ நான் சுகப்படப்போகிறேன் ? -

கனகவல்லி: ஆமாம், என்னைப் பார்த்தால் உங்க ளுக்கு ராட்சசியாக மாத்திரமா தோன்றும்? பேய் பிசாசு களைப்போல் கூடத் தோன்றும். நான் தொலைந்த பிற் பாடுதான் உங்களுக்கு நற்காலம் பிறக்கப்போகிறதென்று இதோடு ஆயிரத் தரத்திற்குமேல் சொல் வி யிருக்கிறீர் கள். நான் இருந்தால் என்ன? இறந்த என்ன? எப்படியாவது உங்கள் கண்முன்பாகச் செத்துப்டோக வேண்டுமென்று எத்தனையோ தரம் உத்தேசித்தேன். இந்தப் பாழும் பிள்ளையின் பாசமானது அப்படிச் செய்ய விடவில்லை. மேலும், அதை எப்படியாவது தொலைத் துக்கொண்டு மாண்டுபோனுல் உங்களுக்குப் பழி உண்டா குமே என்ற வருத்தந்தான் என்னை இப்படியும் அப்படி யும் போகவிடவில்லை, என்மேல் எள்ளளவாவது பிரிய மிருந்தால் நீங்கள் இப்படி எல்லாம் பேசுவீர்களா? உங்களுடைய பிரியமெல்லாம் வேறு இடத்தில் இருக் கிறது. அவளை நினைத்துக்கொண்டு துரங்கும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/5&oldid=677371" இலிருந்து மீள்விக்கப்பட்டது