பக்கம்:ராஜாம்பாள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 இராஜாம்டாள்

சாரம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். நாளை ராத்திரி சகல காரியங்களும் முடிந்துவிடுமென்று சப் மாஜிஸ்டி ரேட்டாரிடம் சொல்லிவிடு.

மறுநாள் சாயங்காலம் மணவாள நாயுடு கொடுத்த சிறு மூட்டையை ராமண்ணு ரகசியமாகக் கனகவல்வி யிடம் பேசப்போவதுபோல் போய்ச் சாமிநாத சாஸ்திரி வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டார். ராத்திரி எட்டு மணியானதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு வும், எட்டுப் போலீஸ் கான்ஸ்டேபில்களும், கிராம முனி. சீபும், ராமண்ணுவுமாகச் சாமிநாத சாஸ்திரி வீடு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் மணவாளநாயுடு நான்கு போலீஸ் கான்ஸ்டேபில்களை வீட்டுக்கு நாலு புறத்திலும் நிறுத்தி விட்டு ஒரு கான்ஸ்டேபிலை முன் வாசலிலும் ஒரு கான்ஸ், டேபிலைப் பின் வாசலிலும் நிறுத்திவிட்டு, வீட்டிலிருந்து யாரையும் வெளியே போகவிடக் கூடாதென்றும் உள்ளே யாரையும் விடக்கூடாதென்றும் காவலிருக்கும் ஆறு கான்ஸ்டேபில்களுக்கும் உத்தரவளித்துவிட்டு மற்றவர் கள் உள்ளே போனர்கள். இவர்கள் அனைவரையும் சாமி நாத சாஸ்திரி உட்காரவைத்து என்னே விசேஷம் என்று கேட்டார். .

மணவாள நாயுடு விசேஷம் ஒன்றும் இல்லை, பொன்விளைந்த களத்துாரில் தீவட்டிக் கொள்ளையடித்த சங்கதி தங்களுக்கு நன்றாய்த் தெரியுமே. கொள்ளே படித்தவர்களில் இரண்டொருவர் அந்திச் சொத்தில் சில வற்றைத் தங்களிடங் கொடுத்து வைத்திருப்பதாகச் சொன்னர்கள். தங்களுடைய பெருந்தன்மையையும் குன அதுபவங்களையும் நன்றாயறிந்த நான் அதைச் சிறி தும் நம்பவே இல்லை. இருந்தாலும் சட்டப்படி நான் தங்கள் வீட்டைச் சோதனை பண்ணுவிட்டால் எனக்கு விரோதிகளாயிருக்கிறவர்கள் நான் ஏதோ லஞ்சம் வாங்கிக்கொண்டு சோதனை செய்யாமலிருந்தேனென்று மேலதிகாரிகளுக்கு மொட்டை மனு எழுதிப்போடுவார் கள். ஆகையால் யாருக்கும் தெரியாமலிருக்கும்படி இந் நேரத்தில் சோதனை செய்ய வந்தேன். அதைக் குறித்து மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/50&oldid=677416" இலிருந்து மீள்விக்கப்பட்டது