பக்கம்:ராஜாம்பாள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அகியாயங்கள் 4

சாமிநாத சாஸ்திரி மகாராஜராய் என் வீடு முழு வதும் சோதனை செய்துகொள்ளுங்கள். அதனல் எனக்குக் கெடுதல் என்ன? மடியில் கனம் இருந்தாலல்லவா வழி யில் பயம் ? - -

இப்படிச் சொல்லிவிட்டுத் தம் பெட்டிகளுடைய சாவிகளை யெல்லாம் தம் வேலைக்காரன் ஒருவனிடங் கொடுத்துத் திறந்து காண்பிக்கச் சொல்லிவிட்டு அவர் அங்கேயே உட்கார்ந்திருந்தார். பெட்டிகளையெல்லாம் திறந்து பார்த்தும் ஒன்றும் அகப்படாததால் வீடெல்லாத் தேட ஆரம்பித்தார்கள். கடைசியாக யாரும் விசேஷ் மாகப் டோகாத ஓரறையில் சுற்றி வைத்திருந்த பாயை உதறினர்கள். அதிலிருந்து பொத்தென்று ஒரு பொட்ட ணம் விழுந்தது. அதை யாரையும் எடுக்க விடா மல் சாமிநாத சாஸ்திரியை அழைத்துவரும்படி ஒரு கான்ஸ்டேபிலே அனுப்பி, அவர் வந்தவுடனே, இந்தப் பொட்டணம் இங்கே வந்த விவரம் என்ன? என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அவர் தமக்குத் தெரியா தென்று சொன்னர். பொட்டணத்தை அவிழ்த்துப் பார்த்ததுந் திருட்டுப்போன நகைகளிற் சில இருந்தன. உடனே நகைகளை எடுத்துக்கொண்டு சாமிநாத சாஸ் திரிக்குக் கால்களிலும் கைகளிலும் விலங்குகள் மாட்டி யாருக்கும் அடங்காத பரம துஷ்டர்களைக் கட்டுவது போல் இருப்புச் சங்கிலியாற் கட்டி, ஒரு வண்டியில் ஏற்றி, பத்துக் கான்ஸ்டேபில்கள் துப்பாக்கிகள் சகிதம் வண்டியைச் சுற்றிவரச் சந்தடி பண்ணுமல் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய், பயங்கரமான ஓர் அறையில் அடைத்தார்கள். ‘எனக்குப் புத்தி தெரிந்தது முதல் என் மனச்சாகதிக்கு விரோதமாய் இதுவரையில் நான் நடந்ததில்லையே! அப்படி இருக்க நான் சிறை யில் அடைபடும்படி நேரிட்டதே. ஒருகால் பூர்வ ஜன்மத்தில் யாரையாவது அநியாயமாய் இம்சித் திருப்பேன். அந்தப் பலன்தான் இப்போது நான் அதுப விக்கிறேன் போலிருக்கிறது ‘ என்று மனத்திற்குள் சாமி நாத சாஸ்திரி எண்ணிக்கொண்டிருந்தார். அவரை அடைத்திருந்த அறையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் காதுக்குக் கேட்கும்படி பின்வருமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/51&oldid=677417" இலிருந்து மீள்விக்கப்பட்டது