பக்கம்:ராஜாம்பாள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 இராஜாம்பாள்

போடச் சொல்லிவிட்டு, இன்னும் சிறு பிள்ளைபோல் ஒடு கிறாய்’ என்று சொல்லித் தட்டிக்கொடுத்தாராம். கலெக் டர் துரையவர்கள் கூட இன்னும் சிறுவனென்று சொன்ன தாக அவர் எல்லாரிடமும் சொல்லிக்கொண் டிருக்கிறார்,

சாமிநாத சாஸ்திரி: என்ன விடுதலை செய்வதற்கும் அவர் பதினறு வயது பாலகுமாரன யிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

ராமண்ணு: நான் மாறுபாஷையாய்ச் சொன்னல் தங்களுக்குப் புரியவில்லைபோல் இருக்கிறது. ஒன்றும் இல்லை. நம் இராஜாம்பாளே அவருக்கு இரண்டாந்தார மாகக் கட்டிக் கொடுப்பதாகத் தாங்கள் வாக்களித்தால் உடனே வெளியே போகலாம். ஆட்சேபமே கிடையாது.

சாமிநாத சாஸ்திரி என் ஏக குமாரத்தியாகிய ராஜாம்பாளைக் கொடிய பாதகனும் லஞ்சம் வாங்கிக் சம்பாதிப்பவனும் அதர்மிஷ்டனும் நன்மை இன்ன தென்றே அறியாதவனுமாகிய அந்தக் கிழட்டுப் பிணத் திற்குக் கல்யாணம் செய்து கொடுப்பதைவிட என் பிராணனை விட்டுவிட மாட்டேன?

ராமண்ணு: என்ன, தங்களுக்கு ஒன்றும் தெரிய வில்லையே! இது உங்களோடு போனுலும் பரவாயில்லை. இன்று உங்களை அடைத்தவர்கள் நாளைக்குக் கோபால னைச் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்வார்கள். அப் பால் தங்கள் குமாரத்தி யாரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுவாள்? கவைக்குதவாத குடிகேடனும் தாசிக் கள்ளனும் நாட்டுக்கோட்டைச் செட்டிகளிடம் கடன் வாங்குபவனும் பேதமில்லாமல் எங்கேயும் சாப்பிடுகிற வனுமாகிய நடேசனைத்தானே மணப்பாள்? இவருக்குக் கொடுத்தால் துர்க்குணங்களோடு கொஞ்சமாவது கெளரதை உண்டு. நடேசன் கல்யாணம் செய்துகொண்டு சொத்தையெல்லாம் வீண் செலவு செய்துவிட்டு உம்மு டைய பெண்ணைச் சோற்றுக்குத் திண்டாடும்படி வைத்து விடமாட்டானே?

சாமிநாத சாஸ்திரி: நான் இப்பொழுதே கோபால னுக்குச் சமாசாரம் தெரிவித்தால் அவன் இருக்கிற ஜாக் கிரதையில் இருக்கமாட்டானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/56&oldid=677422" இலிருந்து மீள்விக்கப்பட்டது