பக்கம்:ராஜாம்பாள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அங்யாயங்கள் 5.

ராமண்ணு, எல்லாம் முடித்துவிட்டேன். தாங்கள் வரும் வரையில் பாக்கி வைக்கவில்லை என்று சொல்லி, சப் மாஜிஸ்டிரேட்டார் வரவேண்டியதுதான் பாக்கி என்றார், சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரிகளை அழைத்துவரச் சொல்லி ஆளனுப்புவதாகச் சொல்லிக் கொஞ்ச நேரத்தில் இருவருமாக வந்து சேர்ந்தார்கள். உடனே சாமிநாத சாஸ்திரி தம் பெண்ணுகிய இராஜாம்பாளைச் சட் மாஜிஸ் டிரேட் சாஸ்திரிகளுக்குக் கல்யாணஞ்செய்து கொடுப்ப தாக வாக்களித்தார். உடனே அவருடைய விலங்குகளே எல்லாம் கழற்றிவிட்டு வெளியே கூட்டிக்கொண்டு வரும் போதே மணவாள நாயுடு, தாம் சர்க்கார் ஆக்கினைப்படி நடக்கவேண்டியது நியாயமாக இருந்தாலும், சாமிநாத சாஸ்திரிகள் விஷயத்தில் அப்படி நடப்பது தமக்கு அதிக வருத்தத்தைக் கொடுத்ததால் சப்மாஜிஸ்டிரேட்டாரிடம் சொல்லி இருவருமாகக் கலந்துபேசி விட்டுவிட வேண்டிய ஏற்பாடு செய்ததாகவும், ஏதோ சில நேரம் காவலில் வைத்திருந்ததற்காகச் சாஸ்திரிகள் மனத்தில் வருத்தம் வைக்காமல் இருக்கும்படிக்கும் வ்ேண்டிக்கொண்டார். அன்றியும், அவரைக் காவலில் வைத்தது யாருக்கும் தெரி யாதாகையால் அந்த விஷயத்தைக் கனவாக நினைத்துக் கொண்டு அதைக் குறித்து வெளியில் பிரஸ்தாபஞ் செய்யக் கூடாதென்றும் சொன்னர்.

இதற்குள்ளாகச் சப் மாஜிஸ்டிரேட்டார் சாமிநாத சாஸ்திரியின் கன்னம் வீங்கவேண்டிய காரணம் என்ன வென்று அவரைக் கேட்டார். அவர் ஒன்றும் மறுமொழி சொல்லாமல் மெளனமாக இருக்கவே இன்ஸ்பெக்டரைக் கேட்டார். அவர் தமக்குத் தெரியாதென்று சொல்லி அங்கிருந்த கான்ஸ்டேபில்களைக் கேட்க, ஒருவன் இன் ன்ை அடித்தானென்று சொன்னன். உடனே சப் மாஜிஸ் டிரேட்டாருக்கு இரு கண்களிலும் நெருப்புப் பொறி பறக்க, இன்ஸ்பெக்டரைப் பார்த்து, மாஜிஸ் டிரேட் அதிகாரமெல்லாம் உன் கான்ஸ்டேபில்களுக்குக் கொடுத்திருக்கிறதோ?’ என்று கடுமையாய்க் கேட்க, இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்து அந்தக் கான்ஸ்டேபிலை அங்கிருந்த பிரம்பால் பலமாய் அடித்ததல்லாமல் உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/59&oldid=677425" இலிருந்து மீள்விக்கப்பட்டது