பக்கம்:ராஜாம்பாள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இராஜாம்பாள்

எழுப்பிவிட்டால் இப்படிக் கோபம் வருகிறது. உங்களை நொந்துகொள்வதில் என்ன பலன்? நான் பாவி; ஜன்மம் எடுத்த நேரம் அப்படிப்பட்டது.

சாமிநாத சாஸ்திரி: நான் தூங்கும்போது எழுப் பாதே என்று பல முறை சொல்லியிருந்தும் நீ எழுப்பின தற்கு நான் சிறிது கோபித்துக்கொண்டால் ஊரிவில் லாத மூட்டையெல்லாம் அளக்கிறாய்! என்னிடம் பேச வேண்டிய காரியமிருந்தால் நீ பகலெல்லாம் பேசக் கூடாதா? போகட்டும்; இரவு ஒன்பது மணிக்குள் எாகச் சொல்லக்கூடாதா? துரங்கும் வரையில் காத்தி ருந்து அதையே ஒரு விரதமாய் வைத்துக்கொண்டு ஏண்டி இப்படி எழுப்பித் தொலைக்கிறாய்?

கனகவல்லி: உங்களுக்குத்தான் வெட்கமென்பது கொஞ்சமாவது கிடையாது. வீட்டில் உள்ளவர்களெல் லாம் விழித்துக்கொண் டிருக்கும்போது உங்களிடம் பேச எனக்கு வெட்கமாயிருக்கிறது. மேலும் பார்ப்பவர்கள் தாம் என்ன சொல்வார்கள்? -

சாமிநாத சாஸ்திரி ஆறு பிள்ளைகள் பெற்ற பிற்பாடு கூட அகமுடையானிடம் பேச என்னடி வெட்கம்? உலகத் திவே அகமுடையானும் பெண்சாதியும் பேசுவ தில்லையோ? நாம்தான அதிசயமாய்ப் பேசுகிருேம்?

கனகவல்லி: தற்காலத்துப் பெண்களைப்போல் அக முடையான் துடைக்குமேல் துடைபோட்டுப் பக்கத் தில் உட்கார்ந்துகொண்டு, யார் வந்தாலும் இல்லை, யார் போனலும் இல்லே, அகமுடையானேடு சிரித்து விளை பாடிக்கொண் டிருக்கச் சொல்லுகிறீர்கள். அதற்கெல் லாம் நான் ஆளல்ல. அப்பேர்ப்பட்ட சிறுக்கி ஒருத்தி யைப் பார்த்து உங்களுக்குக் கல்யாணம் செய்திருக்க வேண்டும். நீங்கள் இப்பேர்ப்பட்டவர்களென்று தெரிந் தால் என் தகப்பளுர் என்னை உங்களுக்குக் கல்யாணஞ் செய்தே கொடுத்திருக்க மாட்டாரே.

சாமிநாத சாஸ்திரி: ஏண்டி! என் வாயைக் கிளப் பினுல் நான் கெட்டவயிைருப்பேன். உன் தகப்பனர் உன்னே வைத்துக்கொண்டு தேடாத இடமெல்லாந் தேடி, ஓடாத இடமெல்லாம் ஓடி, வேண்டாத இடமெல்லாம் வேண்டி, கடைசியாக எனக்குக் கல்யாணம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/6&oldid=677372" இலிருந்து மீள்விக்கப்பட்டது