பக்கம்:ராஜாம்பாள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாம்பாளும் சாமிநாத சாஸ்திரியும் 61

எனக்குத் தெரியாதா? கோபாலனைத் தவிர வேறே கோடி சூரியப் பிரபு வந்து கேட்டாலும் உன்னைக் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. <

இராஜாம்பாள்: அப்பா! எப்படியாவது உங்கள் வாக்குக் கொடுத்தவரைக்கும் சொன்னபிரகாரம் நடப் பதுதான் சரி. வேறு யோசனை செய்வது உசிதம் அல்ல. ஆகையால் முகூர்த்தம் வைத்து நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். இனி யோசனை செய்வதில் பிரயோஜனம் இல்லை. யார் யாருக்குப் பிராப்தம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் நடக்கும். கடவுள் விட்டபடி விடட்டும். மேலும், நீலமேக சாஸ்திரிகள் என்ன சாமா னியமானவரா? சுயார்ஜிதமாகப் பத்து லட்சத்துக்கு மேல் சம்பாதித்துவிட்டார். உத்தியோகத்திலும் சப் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் வகிக்கிறார், லட்சணத்தில் தான் என்ன குறைவு? வயசும் அவ்வளவு ஜாஸ்தி ஆகி விடவில்லை. அப்படி இருக்க அவரைக் கல்யாணம் செய்து கொள்வதில் எனக்குக் கொஞ்சமாவது வருத்தமே கிடை யாது. ஆகையால் நீங்கள் அந்த விஷயத்தைக் குறித்துச் சிறிதேனும் வருத்தம் வைக்காமல் உடனே வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிடச் சொல்லுங்கள். ஆனல் அவர் சப் மாஜிஸ்டிரேட்டாக இருக்கிறபடியால் அவர் அந்தஸ் துக்குத் தாங்கள் கன்னிகாதானம் செய்துகொடுக்கக் கூடாதாகையால் நான் சொன்னதாகச் சொல்லி அவரையே கல்யாணம் வெகு சிறப்பாய் நடத்தவேண்டு மென்றும், அவர் எவ்வளவுக்குச் சிறப்பாய்க் கல்யாணம் நடத்துகிருரோ அவ்வளவுக்கு எனக்கு அவர்மேல் இஷ்டம் அதிகமாக இருக்குமென்றும் சொல்லி, இந்த ராஜதானியிலுள்ள பிரபலமான தாசிகளுக்கும், வாத்தி யக்காரர்களுக்கும், பாகவதர்களுக்கும் சொல்லுவதன்றி, பந்தல்கள் முதலானவையும் விசேஷமாகப் போடச் சொல்லவேண்டும். பொதுவாக இந்தக் கல்யாணத்தைப் போல் இதுவரையில் எவரும் செய்ததில்லை என்ற பேர் வரும்படி செய்யச் சொன்னேனென்றும் சொல் லுங்கள். -

சாமிநாத சாஸ்திரி. நீ பேசுவதைப் பார்த்தால் நான் சொன்னதன்பேரில் உன் புத்தி சிதறிப்போனதாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/65&oldid=677431" இருந்து மீள்விக்கப்பட்டது