பக்கம்:ராஜாம்பாள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண ஏற்பாடுகள் 3.

இல் இப்போது ராஜாம்பாள் தங்களைப் பிரியத்தோடு கல்யாணஞ் செய்துகொள்வதாகவும், கோபாலனுடைய முகத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேனென்றும் இசால்லும்படி செய்துவிட்டேன்; பார்த்தீர்களா?

நீலமேக சாஸ்திரி: ஆகா! அப்படியா? சபாஷ்! நல்ல வேலை செய்தீர். என்னுடைய கட்டாயத்திற்காக என்னை அவள் கல்யாண ஞ் செய்து கொண்டாலும்

கோபாலன் பேரிலேயே அவளுக்குப் பிரியம் இருக்கு மென்று நினைத்திருந்தேன். அதனல் கோபாலனேக்கூட ஏதாவது ஏற்பாடு செய்து பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப லாமா என்று யோசித்திருந்தேன். ஆனல் இப்போது நீர் சொன்ன வார்த்தையால் அப்படிச் செய்யவேண்டிய இல்லையென்று தோன்றுகிறது. அவள் என்னேக் குறித்து என்ன சொன்னுள்? கோபாலனைத் திரும்பிக்கூடப் பார்க்க வில்லை என்றீரே. நீரே நேரில் பார்த்தீரா? அல்லது எவராவது சொன்னர்களா?

ராமண்ணு: நான் இன்ைெருவருடைய வார்த்தை யைக் கேட்டுத் தங்களிடம் இவ்வளவு தைரியமாய்ச் சொல்லுவேன? சுருக்கமாய்ச் சொல்லுகிறேன் கேளுங்கள். உங்களுடைய கல்யாண ஏற்பாடுகளைக் குறித்துப் பேச என்னை ராஜாம்பாள் கூப்பிட்டனுப்பினுள். நான் போன வுடனே கல்யாணம் வெகு சிறப்பாகச் செய்யவேண்டு மென்று சொன்னுள். நான் தங்களுடைய அந்தஸ்துக்குத் தக்கபடி தாங்கள், இப்பேர்ப்பட்ட கல்யாணம் யாருஞ் செய்ததில்லை என்று சொல்லும்படி, அவ்வளவு விசேஷ மானி ஏற்பாடுகள் செய்துகொண் டிருக்கிறீர்களென்று சொன்னேன். அப்பால் தங்களுடைய அழகைக் குறித் தும் கம்பீரத்தைக் குறித்தும் அந்தஸ்தைக் குறித்தும் குளுதுபவங்களேக் குறித்தும் உதாரத்துவத்தைக் குறித் தும் பெருந்தன்மையைக் குறித்தும் ஈகையைக் குறித் தும் அவள் பேசியபோது, ஆஹா ராஜாம்பாளா இப்படிப் பேசுகிருளென்று சந்தேகப்பட்டு என் கண்களைக்கூட நம் பாமல் நன்றாய்க் கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த் தேன். அப்பால் ஒருவேளை கனவோ நனவோ என்று கூட யோசித்தேன். பிறகு ராஜாம்பாள்தான் இப் படிப் பேசுகிருளென்று நிச்சயித்துக்கொண்டேன். ஆகா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/67&oldid=677433" இலிருந்து மீள்விக்கப்பட்டது