பக்கம்:ராஜாம்பாள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இராஜாம்பாள்

அவள் தங்களைப் புகழ்ந்து பேசினதை இன்னதென்று ஆயிரம் நாவைப் படைத்த ஆதிசேஷனலுஞ் சொல்ல முடியாதென்றால் கேவலம் வடிகட்டின முட்டாளாகிய என்னல் எப்படி விஸ்தரித்துச் சொல்ல முடியும்? அவள் இப்படித் தங்களைப் புகழ்ந்துகொண் டிருக்கும் சமயத்தில் கோபாலன் அவள் எதிரே வந்தான். அவனைக் கண்டதும் என்ன செய்கிருளென்று பார்த்தேன். இதுவரையில் பாராத கூலி வேலைக்காரன் ஒருவனைக் கண்டால் எப்படி இருப்பாளோ அப்படியே அவனைப் பாராததுபோல் இருந் தாள். அப்போதும் கோபாலன் போகாமல் அவள் சமீபத் தில் வந்து ஏதோ சொல்ல வாயெடுத்தான். உடனே அவள், இன்று முதல் நீயும் நானும் அந்நியர்கள்: இனிமேல் என்னிடம் நீ பேசத் தகாது’ என்று வெகு கடுரமாகச் சொன்னுள். அப்படி நீ சொல்வதற்கு ஏற்பட்ட கார ம்ை என்ன ?’ என்று கோபாலன் கேட்டான். உன்னி டம் நான் காரணஞ் சொல்லவேண்டிய பிரமேயம் இல்லை, இன்று முதல் நீயும் நானும் அந்நியர்களென்பதை நிச்சயமாய் அறிந்துகொள்’ என்று சொன்னுள். உடனே அவன் அழாத துக்கமாய் எழுந்து போய்விட்டான். இதுதான் நான் நேரில் பார்த்த சங்கதி.

நீலமேக சாஸ்திரி: பேஷ்! நான் எடுத்த ஜன்மம் இன் தல்லவோ புனிதமாயிற்று? அவள் இஷ்டம் எப்படியோ அப்படியே கல்யாணஞ் செய்கிறேன். இரண்டு லட்சம் அல்ல, ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்கிறேன். என்ன கெட்டுப்போயிற்று? எப்படியாவது அவளைத் திருப்தி சேய்ய வேண்டியதுதான். என்ன என்ன செய்தால் அவ ளுக்குத் திருப்தியாயிருக்கும்? சொல்லும், பார்ப்போம்.

ராமண்ணு: தாங்களே நேரில் போய் ராஜாம்பா ளிடம் கேட்டு நீங்கள் இருவரும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். ‘கொண்டவனுங் கொடுத்தவனு. மொன்று; கொட்ட வந்த பறையன் துாரத் துர’ என் பதுபோல் இனிமேல் எங்களேயெல்லாம் தாங்கள் கனவி லும் நினைக்கப்போகிறீர்களா? அதில்லை. எப்படியாவது எஜமானுக்கு இந்த நாயின் பேரில் சிறிது தய விருந்தால் போதும் . நான் போய் வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/68&oldid=684610" இலிருந்து மீள்விக்கப்பட்டது