பக்கம்:ராஜாம்பாள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண ஏற்பாடுகள் 65

ராமண்ணு போய்விட்டார். உடனே நீலமேக சாஸ்திரிகள் கூடிவரம் செய்துகொண்டு ஐந்து மேரு பன்னீர் உடைத்து ஊற்றி, பன்னீரிலே ஸ்நானஞ்செய்து திருப்தியாய்ச் சாப்பிட்டுவிட்டு, அலங்காரஞ் செய்து கொள்வதற்காக மெத்தைக்குப் போய், இரும்புப் பெட்டி யைத் திறந்து வைரக் கடுக்கன்களை எடுத்து நாய்த் தோலிற் சுத்தமாய்த் துடைத்துக் காதிற் போட்டுக் கொண்டார். பத்தரைமாற்றுத் தங்கத்தாற் கட்டி இடையிலே வைரங்களும் ரத்தினங்களும் பொதிந்துள்ள ருத்திராட்ச மணியையும் சாளக்கிராம மணியையும், தங்கத்தாற் கட்டிய பதினேந்து சரம் நல்முத்து ஆரத்தை யும் கழுத்தில் அணிந்தார். நவரத்தினங்களால் அமைத் துள்ள முகப்பையுடைய தங்கப் பூணுரல் போட்டுக் கொண்டார். பத்து விரல்களில் ஒவ்வொரு விரலுக்கும் நவரத்தினங்கள் அமைத்த மோதிரங்கள் இரண்டும், தங்கக் கெட்டிக்காப்பும்,கெட்டிக் கொலுசும், நவரத்தினங் கள் இழைத்த யாளிமுகத் தோடாவும் கையிலும், முழங் கைக்கு மேல் ஒரு கையில் தங்கக் கடையமும், மற்றாெரு கையில் நவரத்தின பாசிபந்தும் மாட்டிக்கொண்டார். ஒரு முழ அகலமுள்ள ஜரிகை முன்றானேயுள்ள பன்னிரண்டு முழ வேஷ்டியை இடுப்பிற் கட்டி, அதற்குமேல் தங்க அரைஞாணைப் பூட்டிக்கொண்டார். உயர்ந்த பணுரிஸ் சால்வை ஒன்றை யோக வல்லவாட்டாகப் போட்டுக் கொண்டு, சிவப்புப் பட்டில் ஜரிகைக்கொட்டடிக் கோராக் களும் கோராக்களுக்கிடையில் ஜரிகைப் புட்டாக்களும் உள்ள மத்தாப்புச் சவுக்கத்தைப் புஜத்தில் தொங்கவிட்டுக் கொண்டார். இந்துஸ்தானி விருந்து வரவழைத் திருந்த உயர்ந்த வாசனைகளைப் பூசிக்கொண்டு, உயர்ந்த ஜவ்வாதை இழைத்துத் திலகமிட்டு, திலகத்திற்குக் கீழ்க் குங்குமப் பொட்டும், திலகத்திற்கு மேல் குங்குமப்பூவும் பச்சைக் கர்ப்பூரமும் ஜவ்வாதுஞ் சேர்த்து உரைத்து வைத்திருக் கும் சந்தனப் பொட்டும் இட்டுக் கொண்டார். மல் லிகை, முல்லை, இரு வாட்சி, சண்பகம், மருக்கொழுந்து, குருவிவேர், கொடிசம்பங்கி, நிலசம்பங்கி, ரோஜா, மனே ரஞ்சிதம் முதலிய புஷ்பங்களாற் கட்டப்பட்ட புஷ்ப ஆரத்தை, மயிரை உதறிக் கட்டி நன்றா ய் வெளியே

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/69&oldid=684611" இலிருந்து மீள்விக்கப்பட்டது