ஸ்திரீ புருஷ சம்பாஷணை 3
கொடுத்ததை மறந்துவிட்டாயோ? நாராயண சாஸ்திரி சொத்துக்காரன்தான், ஆனல் குடியனென்று நிறுத்தி விட்டார். நாராயண சாஸ்திரியை விட நம் பந்துக்க ளில் சொத்துக்காரன் எவன் இருக்கிருன்? நான் தாராயண சாஸ்திரியைவிடச் சொத்திலும் புத்தியிலும் வாசிப் பிலும் உயர்ந்தவனென்றுதானே உன் தகப்பனுர் கெஞ் சாதவர்களே யெல்லாங் கெஞ்சி, இல்லாத பொல்லாத பொய் புளுகுகளைச் சொல்லி உன்ன்ை என் தலையில் கொண்டுவந்து கட்டினர்?
கனகவல்லி: ஆமாம்; நீங்கள் நாராயண சாஸ்தி சியை விட அதிகப் புத்திசாலிதான். உங்களுடைய புத்தி சாலித்தனம் எதில் ஒடுகிறதென்று சொல்லட்டுமா? நன்றாய்ச் சம்பாத்தியம் செய்கிறீர்கள். வடை பாய சத்துடன் சாப்பிடுகிறீர்கள். நல்ல துணிகளைக் கட்டு கிறீர்கள். ஏழைகளுக்குச் சாப்பாடு போடுகிறீர்கள். அவர்களுக்குப் பொருளுதவி செய்கிறீர்கள் இவ்வளவு தான் உங்களுக்குத் தெரியும். அதற்குமேல் உங்களுக் குத் தெரியாது. அந்தக் குடிகார நாராயண சாஸ்திரி அவன் பெண்சாதியை வைத்திருக்கிறதில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்னை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? அவன் பெண்சாதிக்கு, ரவை ஜடைபில்லே, தலைநாகம், கெம்பு அட்டிகை, வைரம் இழைத்த காசுமாலை, வைர ஒட்டியா ணம் முதல், வைரத்தில் ஒரு ஜதை, பச்சையில் ஒரு செட்டு, கெம்பில் ஒரு ஜதை ஆக மூன்று செட்டுகள் செய்து கொடுத்திருக்கிருன். நீங்கள் எனக்குக் கட்டின தாலியை விட வேறே காசத்தனே நகை செய்து போட்டீர்களா? எங்கே, கை மடக்குங்கள், பார்ப்போம்! .
சாமிநாத சாஸ்திரி. நாராயண சாஸ்திரி புத்திசாலி என்று நீயும் உன்னைப்போலொத்த சர்வ மூடாத்மாக்க |ளும் மெச்சிக்கொள்வீர்களே யல்லாது புத்திசாவியா யிருப்பவர்கள் வருத்தத்தைத்தான் அடைவார்கள். அவனுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் பிதுரார்ஜித சொத்துக் கிடைத்தது. அதில் தற்காலத்தில் என்ன மீதி வைத்தி ருக்கிருன்? பெண்சாதிக்குப் போட்டிருக்கும் நகைகளும் குடியிருக்கும் வீடுந்தானே மிச்சம்? நகைகளும் வீடும் சேர்ந்து சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறலாம். மீதி