பக்கம்:ராஜாம்பாள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இராஜாம்பாள்.

தெரியும் படி வைத்துக்கொண்டு, உயர்ந்த வெல்வெட்டில் தங்கப்பொட்டுகளால் யானே, கிளிகளைப்போல் அலங்கரி, கப்பட்ட ஜோட்டைக் காலில் மாட்டிக்கொண்டு, கோமேதகக் கண்களுடைய தங்க யாளியைக் கைப்பிடியாக வைத்த, யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட தடியைக் கையில் தாங்கி, நான்கு சர்க்கார்ச் சேவகர்கள், தங்கள் பில்லைகளோடு சுத்தமான உடுப்பு அணிந்துகொண்டு வண்டியின் முன்னும் பின்னும் ஒடிக்கொண்டு வர, அரபி தேசத்துப் பஞ்ச கல்யாணிக் குதிரைகள் இரண்டு கட்டிய சாரட்டில் ஏறிக்கொண்டு இராஜாம்பாளின் வீடு போய்க் சேர்ந்தார். நீலமேக சாஸ்திரிகள் வந்தாரென்ற சமாசாரத் தெரிந்தவுடனே, இராஜாம்பாள் ஓடிவந்து அவருக்குச் சாஷ் டாங்க நமஸ்காரஞ் செய்து உள்ளே அழைத்துக் கொண்டுபோய்ச் சோபாவில் உட்காரும்படி சொல்லித் தான் கொஞ்ச தூரத்தில் நின்றுகொண் டிருந்தாள். . நீலமேக சாஸ்திரி: கண்மணி ராஜம், ஏன் தூரத்தில் நின்றுகொண் டிருக்கிறாய்? பதிவிரதைகளுக்கு இருக்க வேண்டிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களும் உன்னிடம் குடிகொண் டிருக்கும். விஷயம் எனக்கு நன்முய்த் தெரியும். ஆனல் அந்நியர்க ளிடத்தில் நீ அந்த மாதிரி இருக்கவேண்டியது அவசியமே. என்னிடம் சகஜமாயிருப்பதில் ஆட்சேபம் என்ன? இந்தக் சோடாவில் என் சமீபத்திலேயே நீ உட்காரலாமே.

இராஜாம்பாள்: நாம் கல்யாண்ஞ் செய்துகொண்ட பிற்பாடு ஆயுள் பரியந்தம் ஒருவர் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருக்க வேண்டியவர்கள்தாமே ? கல்யாணம், நடக்கும் வரையில் சில நாளைக்குத் துரவே இருப்பது நல்லதல்லவா? இப்போதே உங்கள் பக்கத்தில் உட்கார்ந். தால் பார்ப்பவர்கள், இன்னும் கல்யாணமுமாகவில்லை, ஒன்றுமில்லை; அதற்குள்ளாக இப்படி இருக்கிரு.ர்கள்!” என்று துாற்றமாட்டார்களா? ஊர்வாயை மூட உலேமூடி உண்டோ? கல்யாணமாகிவிட்டால் யாரும் பேசமாட் டார்கள்.

நீலமேக சாஸ்திரி சரி! நீ நின்றுகொண் டிருப்பது எனக்கு வருத்தமாயிருக்கிறது. பக்கத்திலிருக்கும் நாற் காலியிலாவது உட்கார்ந்து கொள். ஏது? நகைகளெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/70&oldid=684612" இலிருந்து மீள்விக்கப்பட்டது