பக்கம்:ராஜாம்பாள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கோரமான கொலே 71

வந்து சேர்ந்தார். வாசலில் ஆரத்தி எடுத்து மாப்பிள் அளயை வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுவந்து உட்கார வைத்துப் பாலும் பழமும் கொடுத்து நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்து, மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண்ணுக்காகக் கொண்டுவந்த நகைகளைப் பெண்ணுக் குப் போட்டு நிச்சயதார்த்தம் செய்யப் பெண்ணே அழைத்துவரச் சொன்னர்கள். பெண் இருக்கும் இடத் திற் போய்ப் பார்க்கையில் பெண்ணைக் காணவில்லை. ஒரு வேளை கால்வாய்க்குப் போயிருக்கலாமென்று அங்கே தேடினர்கள். அப்பால் வேறு எங்கேயாவது படுத்துத் துரங்குகிருளோ என்று வீடெல்லாந் தேடியும் பெண் அகப்படவில்லை. முதலில் கிசுகிசுவென்று பேசிக்கொண் டிருந்தார்கள். அப்பால் பெண்ணைக் காணுேம் என்ற சங்கதி எல்லாருக்குந் தெரிந்து சகலருந் தேட ஆரம்பித் தார்கள். காலே மூன்று மணிவரையில் எங்கே தேடியும் பெண்ணைக் காணவில்லை. நீலமேக சாஸ்திரி அதிகக் கோபத் துடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடுவிடம் சொல்லிப் போலீஸ் வீரர்களை விட்டு ஊரெங்குந் தேடி எப்படியாவது பெண்ணைக் கண்டுபிடித்துக்கொண்டு வரும்படி ஆக்கினை செய்ததும் அல்லாமல் யார் கண்டு பிடித்துக் கொண்டுவருகிறார்களோ அவர்களுக்குப் பதினுயிரம் ரூபாய் இளும் கொடுப்பதாகவும் சொன்ஞர்.

7. ஒரு கோரமான கொலை

வியாழக்கிழமை காலையில் வக்கீல் துரைசாமி ஐயங் கார் இராஜாம்பாள் கல்யாணத்திற்குப் போவதற்காகப் புறப்பட்டுக்கொண் டிருக்கும் சமயத்தில் தெருவில், பேப்பரையா, பேப்பர், காஞ்சீபுரத்தில் கல்யாணப் பெண்ணின் கொலே! என்ற சத்தங் கேட்டது.

காஞ்சீபுரத்தில் கல்யாணப் பெண்ணின் கொலை என் கிறார்களே, என்று தமக்கு வந்திருந்த காலப் பேப்பரைத் திறந்து பார்த்தபோது, தடித்த எழுத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/75&oldid=684617" இலிருந்து மீள்விக்கப்பட்டது