பக்கம்:ராஜாம்பாள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இராஜாம்பாள்.

‘காஞ்சீபுரத்தில் ஒரு கோரமான கொலை !

சாமிநாத சாஸ்திரியின் ஏக புத்திரியாகிய இராஜாம்பாளின் பயங்கரமான கொலே.

நமது ராஜதானியில் தருமஞ் செய்வதில் நிகரற்ற கலிகாலத்துக் கர்ணனென்று பேர்வழங்கும் காஞ்சீ புரம் பிரம்மஸ்ரீ சாமிநாத சாஸ்திரிகளின் ஏக புத்திரி யாகிய இராஜாம்பாளைக் கொன்று, அடையாள ந் தெரியாமல் இருக்கும்படி கொன்ற இடத்திலேயே நெருப்பால் கொளுத்தப்பட் டிருந்ததென்று கேட்க அதிக விசனப்படுகிருேம். இராஜாம்பாளுடைய கல் யாணம் இன்று தீர்மான ஞ் செய்திருந்ததையும் அவ ளுடைய இஷ்டத்தின்படி லட்சக்கணக்கான ஜனங் களுக்குப் பத்து நாளாகப் போஜனம் செய்வித்து, நேற்று ஒவ்வொரு புருஷனுக்கும் மூன்று ஜதை அங்க வஸ்திரங்களும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மூன்று. புடைவைகளும் கொடுக்கப்பட்டதையும் யோசிக்கை யில் அவளுடைய கொலையைக் குறித்து வருத்தப் படாதவர்கள் இல்லை. எல்லோராலும் விரும் பப்பட்டு இதுவரையில் யாருக்கும் ஒரு தீங்கும் செய் தறியாத இராஜாம்பாளைக் கொலைசெய்த பாதக னுடைய மனக் குரூரத்தை நினைக்கையில் யாருக்கும் உடல் நடுங்காமல் இருக்காது. ஏனென்றால் குழந்தை முதல் இராஜாம்பாளோடு பழகி, உடலும் உயிரும் போலிருந்த கோபாலன் கொலை செய்தானென்பதைக் கேட்க இன்னும் அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது. கோபாலன் சாமானியமானவன் அல்லன். பி. ஏ. பரீட்சையில் முதலில் தேறியிருப்பவன். இதுவரை யில் யாருக்கும் யாதொரு தீங்கும் செய்தறியாதவன். எல்லோராலும் பிரியமாய்க் கொண்டாடப்படு பவன். கொலை செய்ததற்குக் காரணம் கோபால னுக்குப் பெண்ணைக் கொடுக்காமல் காஞ்சிபுரம் சப் மாஜிஸ்டிரேட் நீலமேக சாஸ்திரிகளுக்குக் கல்யா ணஞ்செய்ய ஏற்பாடு செய்ததுதான் என்று சொல்லு கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/76&oldid=684618" இலிருந்து மீள்விக்கப்பட்டது