பக்கம்:ராஜாம்பாள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f d

3.

ஒரு கோரமான கொலே

கேவலம் ஒரு பெண்ணின் நிமித்தம் தன் நற்குண நற்செய்கைகளே விட்டுவிட்டுக் கோபாலன் கொலை செய்திருப்பான என்று சந்தேகிக்க இடமிருக்கிறது. ராவணன் தன் குலத்தோடு நாசமானதற்குக் கார ணம் சீதாபிராட்டியல்லவா? துரியோதனன் தன் குலத் தோடு நாசமானதற்குக் காரணம் துரோபதை அல் லவா? இந்திரனுக்கு உடம்பெல்லாம் ஆயிரம் கண்க ளானது அகலிகை என்ற பெண்ணுலல்லவா? சந்திர னுக்கு வளர்பிறை தேய்பிறை ஏற்பட்டது தாரை என்ற பெண்ணுல் அல்லவா? இன்னும் தங்களுக்குச் சமானம் இல்லாமல் ஒற்றுமையாயிருந்த சுந்தோட! சுந்தர் என்னும் சகோதரர் இருவரும் யாரால் கெட் டார்கள்? கேவலம் ஒரு பெண்ணின் நிமித்தமல்லவா? இவற்றையெல்லாம் யோசிக்குமிடத்தில் தனக்கு அபிமானமான ஒரு பெண்ணின் நிமித்தம் மனிதன் கொலை மாத்திரமல்ல, இன்னும் எதுவும் செய்வான் என்று நம்ப இடமேற்படுகிறது. கடைசியாக இந்தக் கொலையைக் கையும் மெய்யுமாகக் கண்டு பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு அவர்களின் சாமர்த்தியத்தை மெச்சாமல் விடுவது சரியல்ல. நம் போலீஸ் வீரர்கள் சாமர்த்தியசாலி கள் அல்லவென்று சொல்லுவது மூடத்தனம் என் பதற்கு இது ஒர் அத்தாட்சி அல்லவா?’’ - -

தலைப்பில் எழுதியிருந்த, இராஜாம்பாளின் கொலை” என்பதை வாசித்தவுடனே வக்கீல் துரைசாமி ஐயங்காருக்கு விசனம் உண்டாகிவிட்டது; அப்பால் அவர் வாசிக்கவேண்டு. மென்று வாசிக்கவில்லை. அவர் கண்கள் படித்துக்கொண்டு போயினவே தவிர அவர் புத்தி அதிற் செல்லவில்லை. அப்பால் கோபாலன் கொலைசெய்தானென்பதை வாசித் ததும் மூர்ச்சையாகிக் கீழே விழுந்துவிட்டார். பக்கத்தில் இருந்த வேலைக்காரர்கள் அவருக்கு மூர்ச்சை தெளியும் படி செய்தார்கள். காலையில் காபி கூடச் சாப்பிடாமல் வண்டியைத் திருவல் விக்கேணிக்கு ஒட்டச் சொல்லிப் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத கஷ்டமான களவு, கொலைகளை யெல்லாங் கண்டுபிடிக்கக்கூடிய சாமர்த்திய முள்ள துப்பறியும் கோவிந்தன் வீட்டண்டை வண்டியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/77&oldid=684619" இலிருந்து மீள்விக்கப்பட்டது