பக்கம்:ராஜாம்பாள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இராஜாம்பாள்

நிறுத்தினர். துரைசாமி ஐயங்கார் வண்டியை விட்டு இறங்கு முன் கோவிந்தன் ஒரு சிறு முட்டையை எடுத்துக் கொண்டு வண்டியில் வந்து ஏறினர்.

துரைசாமி ஐயங்கார்: கோவிந்தா, நான் வந்து வுடனே மூட்டையோடு வண்டியில் வந்து ஏறிஞயே! நான் உன்னை எங்கே அழைத்துப்போக வந்தேனென்று உனக்குத் தெரியுமா? -

கோவிந்தன், தயவுசெய்து வண்டிக்காரனே ஜல்தி யாய் வண்டியை ஒட்டச் சொல்லுங்கள். ரெயில் போது இன்னும் பத்து நிமிஷங்களே இருக்கின்றன. அப்பால் பேசிக்கொள்ளலாம். .

துரைசாமி ஐயங்கார்: இன்னும் ஒன்பதரை நிமிஷந் தான் இருக்கிறது. நாம் போய் டிக்கட்டு வாங்கி ஏறு வதற்கு நேரம் இராதே.

கோவிந்தன்: கோச்மான் குதிரையை எவ்வளவு ஜல் தியாய் ஒட்ட முடியுமோ அவ்வளவு ஜல் தியாய்க் கர்நாடக ரெயிலுக்கு ஒட்டு. ஜல் தியாய் ஐயர் ஒட்டக் சொல்லுகிரு.ர்.

துரைசாமி ஐயங்கார்: நான் கர்நாடக ரெயிலுக்குப் போகிறேனென்று உனக்கு எப்படித் தெரியும் ?

கோவிந்தன் தாங்கள் கர்நாடக ரெயிலுக்குப் போகிறீர்களென்று அறியச் சக்தியில்லாவிட்டால் என்னைத் தாங்கள் அழைத்துப்போவதிற் பயன் என்ன? டிக்கட்டு வாங்க நேரமில்லை, வாஸ்தவந்தான். நான் ஐந்து நிமிஷங்களுக்கு முன்னேதான் திருவல் லிக்கேணியி விருக்கும் தென்னிந்தியா ரெயில்வேயின் கிளை ஆபிசில் இரண்டு முதல் வகுப்பு டிக்கட்டுகள் வாங்கித் தயாராய் வைத்தேன். இன்று காலே பேப்பரை வாசித்தவுடனே கட்டாயமாய்த் தாங்கள் என்னை அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் போவீர்களென்று எனக்குத் தெரியும். -

துரைசாமி ஐயங்கார்: கோபாலன் ராஜாம்பாளைக் கொலை செய்திருப்பானென்பதை நான் சிறிதேனும் நம்ப வில்லை. உன் அபிப்பிராயம் எப்படியோ ?

கோவிந்தன்: நான் அங்கே போய் நடந்த விருத் தாந்தங்களை அறியாமல் என் அபிப்பிராயம் சொல்ல முடியாது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/78&oldid=684620" இலிருந்து மீள்விக்கப்பட்டது