பக்கம்:ராஜாம்பாள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இராஜாம்பாள்

அந்த வீட்டிற்கு நீ இன்று ராத்திரி சரியாய் 12-மணிக்கு வந்துவிட்டால் நாம் முன்னுல் தீர் மானஞ்செய்த ஏற்பாட்டின் பிரகாரம் நடந்து கொள்வோம்.

இப்படிக்கு, உன் பிரிய நேயன்,

கோபாலன் .

இந்தக் கடிதத்தைக் கண்டவுடனே போலீஸ் இன்ஸ் பெக்டர் உலகளந்த பெருமாள் கோவில் தெருவிற்குப் போர்ை. நானுங் கூடப் போனேன். அவ்விடத்தில் இராஜாம்பாள் எழுதின காகிதத் துண்டு ஒன்று அகப் பட்டது. அதில் பின்வருமாறு எழுதியிருந்தது :

மோசம் போனேன் கோபாலஇ என்னைச் சுடலைமாடன் தெரு, 29-வது நெம்பர் வீட்டிலுள்ள குதிலில்... .. 3. -

இதை வாசித்தவுடனே அக்கடிதத்தில் குறிப்பிட்ட இடம் போய்ச் சேர்ந்தோம். போனவுடனே கதவு திறந் திருந்தது. உள்ளே போனதும் கோபாலன் தன் மார்பின் பேரில் உருத் தெரியாமற் சுட்ட ராஜாம்பாளின் பிரே தத்தை வைத்துக்கொண்டு அழுதுகொண் டிருப்பதைக் கண்டோம். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரே தத்தை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகச் செய்து கோபா லனேச் சிறையில் வைத்துவிட்டார். இதுதான் சமா சாரம். வீட்டிற்கு வந்தவுடனே என் மேஜையின்பேரில் ராஜாம்பாள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந் தது. இதோ இருக்கிறது அந்தக் கடிதம் ; தாங்களே வாசித்துப் பார்த்துக்கொள்ளலாம். • ,

- கடிதம் ம-ா-ா-ஸ்ரீ மகாகனம் பொருந்திய அப்பா அவர்கள் திருப்பொற்பாத கமலங்களுக்குத் தங்கள் அன்பான புத்திரி ராஜாம்பாள் எழுதிக்கொள்ளும் விண்ணப்பம் என்னவென்றால், நான் தாங்கள் கொடுத்த வாக்குக்கு இடையூறு வராதபடிக்கும், தங்களுடைய வாஸ்தவமான அபிப்பிராயத்தின்படி யாருக்கு என்னைக் கல்யாணஞ் செய்துகொடுக்க வேண்டுமென்று ஆதியில் உத்தேசித்திருந்தீர்களோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/80&oldid=684622" இலிருந்து மீள்விக்கப்பட்டது