பக்கம்:ராஜாம்பாள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இராஜாம்பாள்.

ளென்று நம்பியிருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் கோபாலனும் நானும், புருஷனும் பெண்சாதியுமாகி மணக்கோலத்துடன் தங்களை நமஸ்கரிக்க விரும்பும்,

தங்கள் சதாக் கீழ்ப்படிதலுள்ள,

பிரியமான புத்திரி,

ராஜாம்பாள். இந்தக் கடிதத்தைக் கண்டவுடனே கோவிந்தன் கொலே நடந்த இடத்தைப் பார்க்க வேண்டுமென்று சொன்னர். சாமிநாத சாஸ்திரி அவ்விடத்தில் ஒன்று மில்லை என்றும் பிரேதத்தை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விட்டார்களென்றும் சொன்னர். இருந்தாலும் கோவிந்தன் அந்த இடத்தைப் பார்க்கவேண்டுமென்று சொல்லித் துரைசாமி ஐயங்காருடன் அங்கே போய்ப் பார்த்ததில் ஒரு போலீஸ் கான் ஸ்டேபில் அந்த இடத்தில் இருந்துகொண்டு யாரையும் உள்ளே போகவிடாமல் தடுத் துக்கொண் டிருந்தான். துரைசாமி ஐயங்காரைக் கண்ட வுடனே கான்ஸ்டேபில் மரியாதையாய் உள்ளே போய்ப் பார்க்கச் சொன்னன். துரைசாமி ஐயங்காருடன் வந்த கோவிந்தனும் உள்ளே போய் ஜாக்கிரதையாகப் பார்த்து வருகையில் அபூர்வமாய் அகப்படக்கூடிய மஞ்சள்ரோஜாப் புஷ் பத்தின் ஆறு இதழ்கள் அங்கே கிடந்தன். அவைகளை வெகு ஜாக்கிரதையாய் எடுத்து ஒரு காகிதத்தில் மடித்துக் கோவிந்தன் வைத்துக்கொண்டார், அப்பால் அடுப்பண்டை போய் அடுப்புச் சாம்பலேக் கிளறிப் பார்க் கையில் சாம்பலுக்குள் விசித்திர வேலைசெய்த கைத் குட்டையொன்று ரத்தந் தோய்ந்து, துண்டுகளாகக் கிழிக்கப்பட்டுப் புதைக்கப்பட் டிருந்தது.

சென்னையிலிருந்து துரைசாமி ஐயங்காரும் கோவிந் தனும் வந்து கொலே நடந்த இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களென்ற சங்கதி தெரிந்த மணவாள நாயுடு அந்தச் சமயத்தில் அங்கே வந்து சேர்ந்தார். வந்ததுங் கோவிந்தன் அடுப்புச் சர்ம் பலேக் கிளறி அதிலிருந்து கைக்குட்டையை எடுப் பதைக் கண்டதும், கோவிந்தன் காலையில் சாம் பலைக் கிளறிப் பார்க்க மறந்துவிட்டேைைகயால் இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/82&oldid=684624" இலிருந்து மீள்விக்கப்பட்டது