பக்கம்:ராஜாம்பாள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கோரமான கொலே 79.

போது பார்க்க வந்தேன் ; அந்தத் துண்டுகளை இப்படி என் கையில் கொடுங்கள். நான் பார்க்கிறேன்’ என்று சொல்லி வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்ததும், பேஷ்! கோபாலன்பேரில் எவ்வளவு பிரியமுள்ளவர்களும் இப் போது கோபாலன் கொலை செய்யவில்லையென்று சொல்ல முடியாதபடி ருஜுப்படுத்தும் சாட்சியம் எடுத்துக் கொடுத்ததற்காக உமக்கு வந்தனம் அளிக்கிறேன்’ என்று சொல்லி, கிழித்துப் போட்டிருக்கும் கைக்குட்டை பின் ஒரு மூலையிலிருந்த, ‘கோ’ என்னும் அடையா ளத்தைக் காண்பித்து இது கோபாலனுடைய கைக் குட்டை என்று மணவாள நாயுடு சொன்னர்.

மணவாள நாயுடு : கோவிந்தன், முன்னுல் செங்கற் பட்டில் நாங்கள் கிருஷ்ணுரெட்டி கொலைசெய்தா னென்று குற்றஞ் சாட்டினபோது அவன் குற்றவாளி பல்லவென்றும் சாமிரெட்டிதான் குற்றவாளி என்றும் புரளிகள் செய்து ஜூரர்களை நம்ப வைத்திரே! அப்படியே இப்போது கோபாலன் இக் கொலை செய்ய வில்லையென்றும் , ராஜாம்பாளின் அழகைக் கண்டு தேவலோகத்திலிருந்து கந்தர்வர்கள் வந்து கொலே செய்தார்களென்றும் ரு ஜூப்படுத்த வந்தாற்போல் இருக் கிறது! இரவும் பகலும் அதே வேலையாகத் திரியும் எங்களைவிட நீர் மிகுந்த கெட்டிக்காரரென்று பலர் உமக்குப் பனங்கொடுக்கிறார்களே. நீர் முன் ஜன்மத்தில் நல்ல புண்ணியம் செய்திருக்கிறீர்போல் இருக்கிறது. அந்த எண்ணத்தோடு நீர் இப்போது இங்கே வந்திருந்தால் உடனே ஊருக்குத் திரும்பிப்போகலாம். ஏனென்றால், இந்தக் கேசில் நான் கண்டுபிடித்திருக்கும் சாட்சியங் களுக்கு நீர் மாத்திரமல்ல, உம்மைப் படைத்த பிரம்ம தேவனலும் ஆட்சேபம் சொல்ல முடியாது.

கோவிந்தன். தாங்கள் என் விஷயத்தில் தப்பு அபிப் பிராயங் கொண்டிருக்கிறீர்கள். அதிக அதுபோகமுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு விரோதமாகவே நான் டப்பதாகத் தாங்கள் நினைக்கிறீர்கள். அது சரியான அபிப்பிராயமன்று. -

மணவாள நாயுடு; இதுவரையில் போலீசார்களுக்கு விரோதமாய் அவர்கள் செய்தது சரியல்லவென்று அநேக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/83&oldid=684625" இலிருந்து மீள்விக்கப்பட்டது