பக்கம்:ராஜாம்பாள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் - 83

கோபாலன் அடைபட்டிருந்த இடத்துக்குப் போன வுடனே துரைசாமி ஐயங்கார், தாம் கோபாலனுடைய வக்கீலென்றும் அவனைக் கண்டு பேசவேண்டுமென்றும் அங்கே காவல் இருந்தவர்களிடஞ் சொல்லி, உத்தரவு பெற்றுக் கோவிந்தனும் தாமுமாக உள்ளே போனர்கள். அங்கே மூலையில் விசனத்துடன் உட்கார்ந்திருந்த கோபாலன் துரைசாமி ஐயங்காரைக் கண்டதும் எழுந்து ஓடிவந்து அவரைக் கட்டிக்கொண்டு ஒவென்று அழுதான். துரைசாமி ஐயங்காரும் கோபாலன் இருந்த ஸ் திதியைப் பார்த்ததும் சகிக்க முடியாமல் அழுதார். ஐந்து நிமிஷம் கழிந்ததும் கோவிந்தன், தான் இன்னுனென்று சொல்லச் சொல்லியபடியே துரைசாமி ஐயங்காரும் சொல்விக் கோபாலனும் கோவிந்தனும், ஒருவரையொருவர் அறியும் படி செய்துவைத்தார்,

உடனே கோபாலன் கோவிந்தனுடைய கையைப் பிடித்துக்கொண்டு, ராஜாம்பாள் இறந்துபோன பிற்பாடு பூமியில் நான் pவித்திருக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்குச் சிறிதாவது இல்லையாயினும், அவளைக் கொலைசெய்து உருத் தெரியாதபடி சுட்டுக் கொளுத்திய கல்நெஞ்சனகிய கொடிய பாதகனை இன்னனென்று கண்டுபிடித்து அவனைத் தகுந்தபடி சிட்சை செய்துவிட்டு அப்பால் இறந்துபோனல்தான் என் ஆத்மாவானது விண் ணுலகஞ் சேரும். ஒருகால் தாங்கள் கண்டுபிடிக்காத முன் இப்போது மணவாள நாயுடு ஏற்படுத்தியிருக்கும் சாட் சியத்தின்பேரில் என்னைத் துக்குப்போட்டுக் கொன்று விட்டாலும், கோபாலன்தான் இறந்துவிட்டானே, இனி நாம் அதை ஏன் விசாரணை செய்யவேண்டும்?’ என்று தாங்கள் விட்டுவிடாமல், அந்தக் கொலைபாதகனைக் கண்டு பிடித்துத் தண்டிக்கும்வரையில் தாங்கள் இந்த வேலையை விட வேறு வேலை செய்யவே மாட்டீர்களென்று எனக்குக் கட்டாயமாய் வாக்களிக்கவேண்டும். இன்று காலையில் என் தகப்பனரிடம் நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசின போது அவர் தம் சொத்துப் பூராவையுமாவது செல வழித்துக் கண்டுபிடிப்பதாகவும், அதைக் கண்டுபிடிக்க வல்லவர்கள் தாங்களே என்றுஞ் சொல்லித் தங்களே அழைத்துக்கொண்டுவரச் சென்னைக்குப் போயிருக்கிறார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/87&oldid=684629" இலிருந்து மீள்விக்கப்பட்டது