பக்கம்:ராஜாம்பாள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் 87

காரணம் இன்னதென்று எனக்குத் தோன்றவில்லை. ஆனல் அவ் வார்த்தைகள் அவ்வளவு கொடூரமாக இருந் தாலும் அவளுடைய முகக்குறியால் ஏதோ காரணம் பற்றி அப்படிச் சொல்லுகிருளென்றும், என்மேல் இருக்கப் பட்ட அந்தரங்கப் பிரியம் சிறிதும் குறையவில்லையென் றும் எனக்குத் தெரிந்தபோதிலும் என் மனமானது கொஞ்சம் வருத்தமடையா திருக்கவில்லை.

நான் வீட்டிற்குப் போய் ஐந்து நிமிஷங்களுக் குள்ளாக ராஜாம்பாளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அன்று சாயங்காலம் ஏழு மணிக்கு நான் சிங்கார வனத்தண்டை தனித்து வந்தால் அவளுடைய அன்றைய விசேஷ நடத்தையைக் குறித்துத் தான் காரணஞ் சொல்வதுடன் மேல் நடக்க வேண்டிய விஷயங்களுஞ் சொல்வதாக எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தை மேஜையின்பேரில் வைத்துக் காற்றில் அடித்துப் போகாத படி அதற்குமேல் ஒரு கல்லையும் வைத்து விட்டுச் சாப்பிடச் சென்றேன். சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து பார்க்கையில் அந்தக் கடிதத்தைக் காணவில்லை. வீட்டிலிருந்த வேலையாட்களைக் கூப்பிட்டுக் கேட்டதில் யாரும் எடுக்கவில்லை என்று சொன்னர்கள். யாராவது அந்நியர்கள் வந்தார்களா என்று வேலையாட்களைக் கேட்டதற்கும் யாரும் வரவில்லையென்று சொன்னர்கள். அந்தக் கடிதத்தை வைத்து அதற்குமேல் கல்லெடுத்து வைத்தது எனக்கு நன்றா ய் ஞாபகம் இருந்தாலும் அதற்கு முந்தின நாள் ராத்திரி நடந்த சமாசாரங்களாலும், அன்று காலையில் நடந்த ராஜாம்பாளின் விசேஷமான நடத்தையாலும் என் புத்தி சற்றுச் சிதறிப்போயிருந்த தால் ஒருகால் சரியாய்க் கல்லே வைக்காததால் கடிதம் காற்றடித்து ஜன்னல் வழியாய்ப் போயிருக்கலாமென்ற எண்ணத்துடன் தெருவெல்லாம் போய்த் தேடியும் அகப் படவில்லை. சாக்கடைகளிலோ அல்லது எங்கேயோ காற்று அடித்துக்கொண்டு போய்விட்டதென்று சும்மா இருந்து விட்டேன். - -

அன்று சாயங்காலம் ராஜாம்பாள் எழுதியபடி அவள் குறிப்பிட்ட நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே போய்க் காத்துக்கொண் டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/91&oldid=684633" இலிருந்து மீள்விக்கப்பட்டது