பக்கம்:ராஜாம்பாள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 . இராஜாம்பாள்

சரியாய் ஏழு மணிக்கு ராஜாம்பாள் நான் இருந்த இடத்திற்கு வந்து, அத்தான்! நான் இன்று காலையில் தங்களிடம் அப்படிச் சொன்னதற்குக் காரணம் சொல்லு, கிறேன். கவனமாய்க் கேட்டுப் பூராவும் நன்றா ய்க் இர கித்துக்கொண்டு நான் சொல்லுகிறபடி தாங்கள் நடக்க வேண்டுமென்று தங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். நம் ஜாதகங்களைப் பார்க்க ஏற்பட்ட நாள்முதல் இந்த ஊர்ச் சப் மாஜிஸ்டிரேட் நீலமேக சாஸ்திரி என்னத் கல்யாணஞ் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத் துடன், அந்த மனிதவுருக் கொண்டிருக்கும் சனியனுகிய ராமண்ணுவிடஞ் சொல்லி ஜோசியம் பார்ப்பவர்களைப் பயமுறுத்தியும் லஞ்சங்கொடுத்தும் நமக்கு இருவருக்கும் பொருத்தமில்லை என்று சொல்லும்படி செய்தார். ஜோசி யர்களுடைய வார்த்தையை லட்சியஞ்செய்யாமல் என் தகப்பஞர் பொருத்தமில்லாவிட்டாலும் உங்களுக்கே என்னைக் கல்யாணஞ் செய்து கொடுப்பேனென்று சொன்னவுடனே, நீலமேக சாஸ்திரியும் ராமண்ணுவும் யோசனைசெய்து, போவீஸ் புவியாகிய மணவாள நாயுடு வுக்குப் பலமாய் லஞ்சம் கொடுத்துத் திருட்டு நகையை எங்கள் வீட்டில் கொண்டுவந்து வைத்து என் தகப்ப ஞரைப் பிடித்த பிடியிலேயே போலீஸ் ஸ்டேஷனில் அடைத்து அவர் பயப்படும்படியான செய்கைகளெல்லாம் செய்து, கடைசியில் ராமண்ணுவையும் உள்ளே விட்டு நயத்திலும் பயத்திலும் என்னை நீலமேக சாஸ்திரிக்குக் கல்யாணஞ்செய்துகொடுப்பதாக என் தகப்பனுரை வாக் களிக்கும்படி சொல்ல, அவர், தம் பிராணன் போனலும் அப்படிச் செய்யமாட்டேனென்று சொன்னதன்பேரில், உங்களையும் பிடித்து ஜெயிலிலடைக்க உத்தேசித்திருப்ப தாகவும், நீலமேக சாஸ்திரி இன்னும் மூன்று தினங்களில் அவர் இம்சைப்படுத்தி அநியாயமாய் ஜெயிலுக்கு அனுப் பிய ஒரு கைதியினுல் கொல்லப்படுவாரென்றும் ராமண்ணு பிரமாணமாய்ச் சொன்னதன்பேரில், என் தகப்பனர் நீலமேக சாஸ்திரிக்கு என்னைக் கல்யாணஞ் செய்து தர் வேண்டிய அவசியம் ஏற்படாதென்னும் எண்ணத்தினுல் வாக்களித்ததாகவும் என்னிடஞ் சொன்னர், . -

‘என் தகப்பளுரை இம்சைப்படுத்திய நீலமேக சாஸ்திரியின் சொத்துப் பூராவையும் அழித்து அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/92&oldid=684634" இலிருந்து மீள்விக்கப்பட்டது