பக்கம்:ராஜாம்பாள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் 89.

அவமானப்படுத்த எண்ணி நான் தங்களை வெறுப்பதாகவும் அவரை இஷ்டத்தோடு கல்யாணஞ் செய்துகொள்வதாக வுஞ் சொல்லி, அவருடைய சொத்து, லஞ்சம் வாங்கிச் சம்பாத்தியஞ் செய்த சொத்தாகையால், அதை நல் வழியிற் செலவழிக்க வேண்டுமென்று உத்தேசித்து வேண் டிய ஏற்பாடு செய்திருக்கிறேன். அந்த வேடிக்கையெல் லாம் தாங்கள் கண்டு மனத்திற் களிகூர வேண்டுமே தவிர, வெளிக்கு நான் தங்களைக் கல்யாணஞ் செய்துகொள்ள மாட்டேனென்று சொல்லியிருப்பதால் அதிக விசனத்தில் இருப்பதாகப் பாவனை செய்யவேண்டும். இன்றைக்குப் பதினைந்தாம் நாள் புதன்கிழமை ராத்திரி, நாம் இருவரும் போவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொண்டு அன்று சாயங்காலம் எனக்குத் தெரிவித்தால் தாங்கள் எங்கே எத்தனே மணிக்கு வரச்சொல்லி எழுதுகிறீர்களோ, அத்தனை மணிக்கு அங்கே வந்து சேருகிறேன். இன்று முதல் அதுவரையில் தாங்கள் எனக்குக் காகிதங்களும் எழுதக்கூடாது என்னைப் பார்க்கவும் பிரயாசைப்படக் கூடாது. என்ைேடு ஒரு நாள் கூடப் பேசாமல் இருப்பது உங்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கு மென்று எனக் குத் தெரிந்தபோதிலும் இதுமுதல் என்னைச் சில நாளைக்கு அதிக ஜாக்கிரதையாக வேவுகாரர்களே வைத்துக் காப் பார்களாதலால் நீங்கள் எனக்குக் கடிதங்கள் எழுதுவதும், என்னிடம் பேசுவதும், நான் எண்ணிக்கொண் டிருக்கும் எண்ணங்களைப் பிரதிகூலப்படுத்துமாகையால், நீங்கள் பெரிய மனசுவைத்து நான் சொன்னபடி நடக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இனி அதிக நேரம் நான் இங்கே இருக்கக்கூடாதாகையால் நான் போய்வருகி றேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

நாங்கள் இரு வரும் பேசிக்கொண் டிருந்தபோது பக்கத்திலுள்ள புதரில் ஆள் நடமாடினல் இலைகள் எப்படி அசையுமோ அப்படிச் சத்தங் கேட்டது. கடைசியில் ராஜாம்பாள் போன பிற்பாடு யாராவது ஒண்டிக் கேட்டார்களோ என்னவோ என்று புதரெல்லாம் தேடி யும் யாரும் அகப்படவில்லை. பூனேயாவது பறவைக ளாவது இலைக்குள் ஒடினதால் அப்படிச் சத்தம் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/93&oldid=684635" இலிருந்து மீள்விக்கப்பட்டது