பக்கம்:ராஜாம்பாள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் 91.

சொல்லச் சொல்லுவதால் விவரமாய்ச் சொல்லுகிறேன். என்னை லோகசுந்தரியின் வீட்டு மாடிக்கு அழைத்துக் கொண்டு போய் ஓர் அறையைக் காண்பித்து, ‘அந்த அறையில் லோகசுந்தரி இருக்கிருள்; தாங்கள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போங்கள்’ என்று சொல்வி விட்டு, வேலைக்காரி போய்விட்டாள். -

லோகசுந்தரி வீட்டிற்குப் போனல் நான் அவளுடன் பேசிக்கொண் டிருக்கும் இடம் அதுவாதலால் எப்போதும் போல் போனேன். அவ்விடத்தில் லோகசுந்தரியைக் காணவில்லை. ஆனல் எப்போதும் பூட்டுப் போட்டிருக் கும் ஓர் அறையின் கதவு திறந்திருந்தது. கால்மணி நேரம்வரையில் லோகசுந்தரி வருவாளென்று காத் திருந்தும் அவள் வராததால் கீழே இறங்கிப்போய் வேலைக்காரியிடம் கேட்டேன். லோகசுந்தரி மாடியில் தான் இருக்கிருளென்றும், அந்த அறையில் இல்லா விட்டால் அதற்குப் பக்கத்து அறையில் ஒரு வேளை படுத்திருப்பாளென்றும் என்னைக் கண்டு அவசியம் பேச வேண்டுமென்று சொன்னதால் தயவுசெய்து போய் அவளிடம் கட்டாயமாய்ப் பேசிவிட்டுப் போகும்படிக்கும் சொன்னுள். அவளைப் போய் எழுப்பச் சொன்னேன். அந்த அறைக்குத் தான் போகக்கூடாதென்று என்னையே போய் எழுப்பச் சொன்னுள். - ஏதோ அவசரமான காரியமென்று சொல்லுகிருளே என்ற எண்ணத்துடன் நான் அந்த அறைக்குள் போனேன். அந்த அறையின் தரை யெல்லாம் உயர்ந்த ரத்தினக் கம்பளியால் மூடியிருந்தது. கம்பளிக்குமேல் ஒரு பக்கத்தில் பளிங்குக் கல் மேஜையின்பேரில் முகங் கழுவிக்கொள்வதற்காக அழகான கண்ணுடியால் செய்யப் பட்ட ஒர் அகலப் பாத்திரத்தில் தண்ணிர் வைத்திருந் தது. அதற்குச் சமீபத்தில் எட்டு அடி உயரமும் நாலடி அகலமும் உள்ள இரண்டு நிலைக்கண்ணுடிகள் நிறுத்தி யிருந்தன. நிலைக்கண்ணுடியின் பக்கத்தில் தந்தப்பெட்டிக் குள் மிகவும் அழகான சீசாக்களில் சிறந்த விலைபெற்ற அத்தர்கள் வைத் திருந்தன. அந்த அறையின் நான்கு பக்கங்களிலும் உயர்ந்த சாம்பிராணி வ ர் த் தி க ள் கொளுத்தியிருந்ததால், அந்த அறை முழுதும் வாசனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/95&oldid=684637" இலிருந்து மீள்விக்கப்பட்டது