பக்கம்:ராஜாம்பாள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் 93

அவளுக்குப் பதின் முன்று வயதிலேயே ருதுசாந்தி முகூர்த் தம் செய்யாமல் இறந்துபோனதால், அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய ஸ் திதி இப்படி இருக்கிறதே என்ற வருத்தத்தால் அவளிடத்தில் நான் பேசிக் கொண் டிருந்தேன். அவள் புருஷன் இறந்து மூன்று வருஷம் ஆகிவிட்டதால் இப்போது அவளுக்கு வயது பதினறு. அவளை இரண்டாம் விவாகம் செய்துகொள்ளும்படி நான் பல முறை சொல்லியிருக்கிறேன். ராஜாம்பாளும் சொல் லியிருக்கிருள். -

ஆகவே, நான் மறுபடியும் அவ்வறைக்குள் பிர வேசிக்க மாட்டேனென்று திட்டமாய்ச் சொல்லவே அப்படியானுல் எப்போதும் வாலாயமாய்ப் பேசிக்கொண் டிருக்கும் அறையிலாவது உட்கார்ந்து பேசலாமென்று சொல்லி அங்கே போட்டிருந்த சோபாவில் வந்து உட் கார்ந்து கொண்டு என்னே அவள் பக்கத்தில் உட்காரச் சொன்னுள். அவள் கட்டிக்கொண் டிருக்கும் சல்லாவை மாற்றிவிட்டு, எங்கள் ஜாதியாசாரத்திற்குத் தகுந்த கொறநாட்டுப் புடைவை, அல்லது சுங்கடிப் புடைவை கட்டிக்கொண்டு வந்தாலொழிய நான் உடனே வெளியே போய்விடுவே னென்று சொன்னதன்பேரில், நல்லது, அப் படியே கட்டிக்கொண்டு வருகிறேன்’ என்று சொல்விப் போய் உயர்ந்த கொறநாட்டுப் புடைவையைக் கட்டிக் கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தாள். நான் பக் கத்தில் இருந்த ஒரு நாற்காலியின்மீது உட்கார்ந்து கொண்டு என்னைக் கூப்பிட்ட காரணம் என்ன என்று கேட்டேன். &

அதற்கு அவள், ‘கோபாலா! நீ அடிக்கடி என்னே மி ) கல்யாண ஞ் செய்துகொள்ளும்படி சொல்வி யிருக்கிருயே! அதை மறந்துபோளுய்போல் இருக்கிறது?’’ என்று கேட்டாள். நான் மறக்கவில்லையென்றும் அப்படிச் செய்துகொள்வதே நல்லதென்றும் சொன்னேன்.

‘நீ சொன்னதைப்பற்றி யோசித்து நான் மறு கல்யாணஞ் செய்துகொள்ளவேண்டுமென்று தீர்மானித் துக்கொண்டேன். இதுவரையில் ஏன் பயந்துகொண் டிருந்தேனென்றால், என் பெற்றாேர்களுக்கு நான் ஒரே பெண் ஆதலாலும் என்னுடைய புருஷரும் ஒரே பிள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/97&oldid=684639" இலிருந்து மீள்விக்கப்பட்டது