பக்கம்:ராஜாம்பாள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் 95.

எனக்கு எள்ளளவாவது உபகாரம் கிடையாது; நான் பூர்வ ஜன்மத்தில் விசேஷத் தவம் செய்திருப்பதால்தான் நான் விசேஷ அழகுள்ளவளென்பதாக உன் மனத்தில் தோன்றியது. எப்பொழுது உனக்கு என்னைவிட அழகுள்ள பெண் கிடையாதென்று தோன்றிவிட்டதோ, இனி என் மனக்குறை இன்றாேடு நிவர்த்தியாகிவிட்டது’ என்று சொன்னுள்.

நீ அழகான பெண்தான் என்று நான் சொன்ன தால் உன் மனக்குறை எவ்வாறு தீரும்?’ என்று கேட் டேன். -

அதற்கு அவள், நீ ஆதி முதலே என்மேல் பட்சமாய்த்தானே இருந்திருக்கிறாய்?’ என்று கேட் டாள். நான் ஆம் என்றேன்.

அப்பால் அவள், ஆதி முதலே நீ என்பேரில் பட்சமாயிருந்திருக்கிறாய்; இப்போது நான் மிகுந்த அழகுள்ள பெண்ணென்றும், என்னைப் பார்த்தவர் விரும்பாமல் இருக்கமாட்டார்களென்றுஞ் சொன்னுய் ; நானும் உன்பேரில் ஆதிமுதல் பட்சமாயிருந்திருக்கிறேன். பூலோகத்திலுள்ள புருஷர்களிலெல்லாம் நீயே அழகுள்ள வன் என்பதாகவும் எண்ணியிருக்கிறேன். ஆகையால் நீ எப்படி என்னை எண்ணியிருக்கிருயோ அப்படியே நானும் உன்னை நினைத்திருக்கிறேன். நீ என்னை மோசஞ் செய்யமாட்டாயென்று உன்னிடம் எனக்குப் பூராவும் நம்பிக்கை உண்டு. நீ கல்யாணஞ் செய்துகொள்ள வேண்டுமென்று உத்தேசித்திருந்த ராஜாம்பாளும் நீலமேக சாஸ்திரியைக் கல்யாணஞ் செய்துகொள்வதாய்ச் சம்மதித்துவிட்டாள். அப்படி இல்லையென்று பின்னல் ஒருவேளை அவள் மாறினாலும் எப்படி அவள் இன்னெரு வரை ஏமாற்றுகிருளோ அதைவிட உன்னை அதிகமாக ஏமாற்றுவாளேயல்லாது ஏமாற்றாமல் இருக்கமாட்டாள். ஆகையால் ஒருவரை ஒருவர் இச்சைப்படும் நாம் இருவரும், கல்யாணஞ் செய்துகொள்வதில் என்ன ஆட்சேபம் இருக்கிறது?’ என்று கேட்டாள்.

இவ்வளவு நேரம் மாறி மாறி ஏன் பேசிக்கொண்டு வந்தாளென்று அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. தன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்வதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/99&oldid=684641" இலிருந்து மீள்விக்கப்பட்டது