பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
ராதை சிரித்தாள்
'வாங்க, செளக்கியத்தான?"என்று கேட்டாள்

ராதை.

வண்டியிலிருந்து இறங்கி வந்த சிவராமன் அவளது புன்னகைக்கும் இன்மொழிக்கும் பதிலாகத் தலையசைப்பும்

மென்னகையும் அளித்தான். 'ஏய், சாமான்களை யெல்லாம் உள்ளே கொண்டுவந்து வையப்பா' என்று வண்டிக்காரனுக்கு உத்திரவிட்டு விட்டு வாசற்படியைப் பார்த்தான்.

அங்குதான் அவள் நின்றாள். வாங்க, உள்ளே

வந்து உட்காருங்க' என்று அன்பாக உபசரித்தாள். "எங்க அம்மா அப்பால்லாம் செளக்கியம் தானே?"

'ஊம்'என்று தலையசைத்தான் அவன். அவளே

ஒருமுறை பார்த்தான். வேறு என்ன சொல்வது, அல்லது எப்படிப் பேசுவது என்று அவனுக்குத் தெரிய வில்லையோ என்னவோ! மெளனமாக நின்றான்.

அவள் அவனே வியப்புடன் கவனித்தாள். வழி

விட்டு விலகி உள்ளே போனாள். 'அவுக கடைக்குப் போயிருக்காக, மத்தியானச் சாப்பாட்டுக்குத்தான் வருவாக இனிமே' என்று அவளாகச் சொன்னாள்.