இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும். குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல் இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது எங்கே எப்படித் தண்ணிர் குடிப்பது என்றெல்லாம் கற்றுக் கொடுக்கும்.
அந்தக் காட்டுக்கு அடிக்கடி வேட்டைக்காரர்கள் வருவார்கள். அவர்கள் வரும் போது கூடவே வேட்டை நாய்களையும்