பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

99

"அம்மா இப்பதான் வந்து சொன்னாங்க. துணியெல்லாம் கொஞ்சம் தைக்கணும், மாடி ஜன்னல் ஸ்கிரீனெல்லாம் ரொம்பப் பழசாப் போச்சு. புதுத் துணி வாங்கிவச்சிருக்கேன், போய்தச்சுப் போடுன்னாங்க.”

“ஹோம்லதானே இருக்கே?”

“பின்ன எங்க போறது?..... இது யாருங்க மதுரம்மா?”

“எனக்குச் சொந்தம்...” என்று மதுரம் சிரிக்கிறாள்.

மைத்ரேயிக்கு அவள் ஹோமிலிருந்து வந்தவள் என்று புரிந்து கொண்டதுமே பரபரப்பாக இருக்கிறது.

“ஹோம்ல வேலையாயிருக்கிறீங்களா?” என்று கேட்கிறாள்.

“வேலை, இருப்பு, எல்லாந்தான்...” என்று சிரிக்கிறாள் அநுசுயா. ஹோமில் வேலை கிடைக்க என்ன படித்திருக்க வெண்டும் என்றெல்லாம் கேட்க ஆசையாக இருக்கிறது, நாசமாகவும் இருக்கிறது.

அநுசுயா கையிலிருக்கும் பையைத் திறந்து, மடித்த தாளொன்றை மதுரத்தினிடம் கொடுக்கிறாள்.

“அம்மா உங்கிட்ட ஒரு ஃபாரம் கொண்டு கொடுக்கச் சொன்னாங்க...”

“இப்படிக் கொடு” என்று வாங்கிக் கொள்ளும் மதுரம் அதை மைத்ரேயியிடம் கொடுக்காமல் சமையலறைத் தட்டின் மீது ஓரத்தில் வைக்கிறாள்.

அநுசுயா மாடிக்குப் போகிறாள்.

“வா, வா...பசிக்கும் உனக்கு, நாம் சாப்பிடலாம். நான் தோட்டத்திலிருந்து இரண்டிலை பறிச்சிண்டுவரேன்...” என்று கத்தியுடன் கொல்லைப்புறம் செல்கிறாள்.

“இந்தம்மா வந்திடுச்சில்ல? வாழ மரம் மொட்டை. இரம்மா, சருகு தரேன்...” என்று கோகிலாவின் புருஷனான தோட்டக்காரக் குப்புசாமி சண்டைக்கு வருகிறான்.

ஒரு இலை பறிச்சா இவனுக்குக் கொள்ளை போயிடும்!

சமையலறையில் இரண்டு இலைகளையும் போட்டு நீர் தெளித்து, கறி, கூட்டு, ஊறுகாய், மோர், குழம்பு, ரசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/101&oldid=1101955" இலிருந்து மீள்விக்கப்பட்டது