பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ரோஜா இதழ்கள்

என்ற உணர்வு அவளுள் உறுத்த, நாணமும் குற்ற உணர்வும் அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தடுத்திருக்கின்றன.

முதன்முதலாக அந்த ஓட்டல் படியேறி வந்தது அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. எதிரே இருந்த கண்ணாடியில் இருவர் உருவங்களும் தெரிந்தன. அவன் கறுப்பு. ஆனால் முடி அழகாகச் சுருண்டு சுருண்டு முன் நெற்றியில் விழும். ராட்சஸ வாளிப்பு இல்லை. அவளுடைய உயரம் தான். ஆனால் அவன் சிரித்தபோது, முதன் முதலாக அவளை விழுங்கிவிடும் நோக்கில் பார்த்தபோது.

“அடாடா... என்னம்மா, தனியா...? யாரிட்டானும் சொல்லி அனுப்பினால் பையங்கிட்டக் குடுத்து அனுப்ப மாட்டேனா ?”

“இல்லீங்க. (அவள் இப்போதெல்லாம் பேச்சுப் பழக்கத்தில்கூட சாதி தெரியக்கூடாது என்று மறைக்கிறாள்) யாருமில்ல. திடீர்னு ஒரு சிநேகிதி பார்க்க வந்திருக்கா. ரெண்டு ஸ்வீட், மிக்ஸ்சர் பொட்டலம், காப்பி...”

“ஓ, அதுக்கென்ன, நான் பையன்கிட்ட அனுப்பி வைக்கிறேன். பையா...?” என்று மணியை அடிக்கிறான்.

ஓர் அழுக்குச் சராய்ப்பையன் வந்து நிற்கிறான்.

“ஸ்வீட் என்ன வேணும்? ஜாங்கிரி இருக்கு; ரவா லாடு இருக்கு...”

“ஜாங்கிரியே இருக்கட்டுமே? கணக்கில் எழுதிக்குங்க..”

மென்மையான உணர்வில் ஆயிரம் ஊசிகள் தைக்கின்றன.

“ரெண்டு ஜாங்கிரி, மிக்ஸ்சர் பொட்டலம், ரெண்டு ஸ்பெஷல் காப்பி எடுத்திட்டுபோ...”

அவனை ஏறிட்டுப் பார்க்க இயலாமல், நன்றி என்றுகூடச் சொல்லக் கூனிக் குறுகி, அவள் திரும்புகிறாள். “இந்த பொண்ணு, பிராமணப் பொண்ணு. இப்படி ஒரு சேர்க்கையுடன் வந்து...” என்று நினைப்பானோ என்று இன்று தான் தோன்றுகிறது. பின்னே நெடுஞ்சாலையில் ஒட்டல் பையன் காப்பித் தம்ளர் பொட்டலங்களுடன் புள்ளி போல் தொடருகிறான். வீடு திரும்புமுன் பொட்டலங்களையும்